புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஆக., 2022

WelcomeWelcome பாராளுமன்றத்தை இரண்டரை வருடங்களில் கலைப்பதற்கு ஆளும்கட்சி எதிர்ப்பு!

www.pungudutivuswiss.com


பாராளுமன்றத்தை இரண்டரை வருடத்திற்கு பின்னர் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி வசமாக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தை, திருத்தம் செய்யுமாறு ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

பாராளுமன்றத்தை இரண்டரை வருடத்திற்கு பின்னர் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி வசமாக்கும் வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தத்தை, திருத்தம் செய்யுமாறு ஆளும் தரப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர்.

பாராளுமன்றத்தின் பதவி காலம் நான்கரை வருடத்தை முழுமையடைந்ததை தொடர்ந்து பாராளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த பாராளுமன்ற அமர்வின் போது அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்ட மூலத்தை சபையில் சமர்ப்பித்தார், அதனை தொடர்ந்து சட்டமூல வரைபு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது.

9ஆவது பாராளுமன்றத்தின் பதவி காலம் இரண்டரை வருடத்தை நிறைவு செய்ததை தொடர்ந்து பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தில் திருத்தம் உள்வாங்கப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பின் சுமார் 50 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் இவ்விடயத்தில் பாராளுமன்றத்தின் பதவி காலம் நான்கரை வருடத்தை கடந்ததன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என கட்சி மட்டத்திலும்,தனிப்பட்ட முறையிலும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தின் பதவி காலம் 6ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டது. 9ஆவது பாராளுமன்றத்தின் பதவி காலம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் இரண்டரை வருடத்தை பூர்த்தி செய்கிறது. பாராளுமன்றத்தின் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இரத்தாகும்.

ad

ad