புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2024

இத்தாலியின் நேபிள்ஸ் நகரில்1 மில்லியன் யூரோ பணத்தாள்கள்: நவீன அச்சகம் கண்டுபிடிப்பு: சந்தேகநபர் கைது!

www.pungudutivuswiss.com
11 மில்லியன் யூரோ மதிப்புள்ள நாணயத்தாள்களைப் போலியாக தயாரித்ததாகச் சந்தேகப்படும் ஒருவரை இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் வைத்து ஐரோப்பியக் காவல்துறை அமைப்பான யூரோபோல் கைது செய்துள்ளதாக அறிவித்தது.
கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே 8 மில்லியன் பெறுமதியான போலியான யூரோ நாணயத்தாள்களை விற்றுவிட்டதாகவும் அவற்றில் பெரும்பாலானவை பிரான்சில் உள்ளதாகவும் தெரியவந்தது.

அத்துடன் போலித் தாள்களை அச்சிடும் பதுங்கு குழி ஆய்வகம் ஒன்றையும் அவர் அமைந்திருந்தார். அங்கு மேலும் 3 மில்லியன் பெறுமதியான நாணயத்தாள்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு மட்டும் 27 விழுக்காட்டுக்கு அதிகமான போலி யூரோ நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருந்து மீட்கப்பட்டதாகவும் இவற்றுக்கு இவரே பொறுப்பு என்று நம்புவதாக காவல்துறை தெரிவித்தது.

நிலத்திற்கு கீழே அமைந்துள்ள பதுங்குழியில் அதிநவீன அச்சகம் அமைந்துள்ளது. இது கராஜின் கதவுக்கு பின்றால் இந்த பதுங்குழி மறைக்கப்பட்டிருந்தது. 31 டிஜிட்டல் பிரிண்டிங் இயந்திரங்கள் மற்றும் பரந்த அளவு மூலப்பொருட்களைக் கொண்ட அச்சக ஆய்வகம் இங்கே இருந்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம், பார்சிலோனா, ரோம் மற்றும் நேபிள்ஸில் 100 யூரோக்களுக்கு மேல் போலியான €100 பணத்தாள்களைத் தயாரித்து விநியோகித்த 14 பேரை காவலதுறையினர் கைது செய்தனர்.

2023 ஆம் ஆண்டில் 5 மில்லியன் யூரோக்களுக்கு மேல் மதிப்புள்ள 56,000 போலியான பணத்தாள்களை யேர்மன் அதிகாரிகள் திரும்பப் பெற்றனர்

ad

ad