-
8 செப்., 2013
வடக்கில் அபிவிருத்தியை தொடர்வதா இல்லையா; சந்தர்ப்பம் வழங்கியுள்ளார் ஜனாதிபதி பசில் எச்சரிக்கை
துவக்கில்லாத சூழல், குண்டுச் சத்தம் இல்லாத சமாதானம், கல்வி. சுகாதாரம் போக்குவரத்து என்பன தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமானால் ஜனாதிபதி வழங்கியிருக்கும் சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்த
சர்வதேச மன்னிப்பு சபையின் பிரதான அதிகாரிகள் மூவர் கொழும்பில்! அரசாங்கம் செய்வதறியாது தவிப்ப
சா்வதேச மன்னிப்பு சபையின் பிரதான அதிகாரிகள் மூன்று போ் கொழும்புக்கு சென்றுள்ளனா். சுற்றுலா வீசாவில் கொழும்புக்கு சென்ற அவா்கள் உத்தியோகபூர்வமற்ற முறையில் பல சந்திப்புக்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
7 செப்., 2013
த.தே.கூ இன் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் இன்று காலை 10 மணியளவில் பஸ் நிலையத்திற்கு அருகேயுள்ள வைரவர் கோவிலிலிருந்த்து ஆரம்பமானது.
கொழும்பில் வாழும், யாழ் மாட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பங்கேற்றார்.
கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் முனைவோர்கள், மூத்த பிரஜைகள், ஊடகத் துறையினர் என நூற்றுக்குக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு திரு. சித்தார்த்தன் அவர்களது கருத்துக்கனைச் செவிமடுத்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான தமது ஐயங்களை அவரிடம் கேள்விகளாக வெளிப்படுத்தியதுடன், தமிழ் கூட்டமைப்பிடம் எத்தகைய செயற்பாடுகளைத் தாம் எதிர்பார்க்கின்றோம் என்பவை தொடர்பான கருத்துக்களையும் வழங்கினர்.
நடிகை ரோஜா உண்ணாவிரதம்
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கான அமைக்க மத்திய அரசும், காங்கிரஸ் காரிய கமிட்டியும் முடிவு
செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
திருத்தணியை அடுத்த நகரியில் நடந்த போராட்டத்தில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். நகரியில் உள்ள ஓம் சக்தி கோவில் அருகில் இருந்து மணிக் கூண்டு வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் நடிகை ரோஜா பேரணியாக வந்தார்.
6 செப்., 2013
வாக்களிப்பு எமது மக்களின் வரலாற்றுக் கடமையாகும்: அறிவகத்தில் இடம்பெற்ற மாபெரும் தேர்தல் பிரசாரத்தில் மனோகணேசன்
வாக்களிப்பு என்பது எம்மக்களின் சமூகப் பொறுப்பாக, வரலாற்றுக் கடமையாக உள்ளது. எனவே எங்களிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற வகையில் உள்வாங்கப்பட என வேண்டும் என “ அறிவகத்தில்” நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் மனோ கணேசன் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் போராட்டம் மௌனிக்கப்படவில்லை! தாயகம், தேசியம், சுயநிர்ணயம் வெல்வது உறுதி வைத்திய கலாநிதி பத்மநாதன்
இன்றைய சூழலில் தமிழருடைய பலமாகவும் அரனாகவும் இருந்த விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்டதான கருத்தை நான் ஏற்பதில்லை மாறாக அது பின்னடைவு என லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் வைத்திய கலாநிதி பத்மநாதன் தெரிவித்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயார.இலங்கைக்கு இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது: பேராசிரியர் ரொஹான் குணரட்ன

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)