புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2013

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: கே.ஆர் 449 வாக்குகளுடன் வெற்றி: எஸ்.தாணு 252 வாக்குகள் பெற்று தோல்வ
 
2013 2015ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட சங்கத்தின் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மாலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 


தலைவர் பதவிக்கு கே.ஆர் , எஸ்.தாணு ஆகியோர் போட்டியிட்டனர். இதில் கேயார் வெற்றி பெற்றார். 
கே.ஆர் 449 வாக்குகளும், எஸ்.தாணு 252 வாக்குகளும் பெற்றனர். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுபாஷ் சந்திரபோஷ் 407, டி.ஜி.தியாகராஜன் 358 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர்.
செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஞானவேல்ராஜா 414, டி.சிவா 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர். இதே பதவிக்கு போட்டியிட்ட சிவசக்திபாண்டியன் 280 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

21 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டதில் எஸ்.தாணு அணியைச் சேர்ந்த ராதாரவி, கருணாஸ் ஆகிய இருவர் வெற்றி பெற்றனர். சுயேட்சையாக போட்டியிட்ட கோவைத்தம்பி வெற்றி பெற்றார். இவர்கள் மூன்று பேரைத் தவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் கே.ஆர் அணியைச் சேர்ந்தவர்கள்.

ad

ad