புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 செப்., 2013

வடக்கில் தெரிவு செய்யப்படும் முதலமைச்சரினால் அங்குள்ள இராணுவத்தை குறைக்க முடியாது: பஸில்

மாகாண சபைத் தேர்தல் ஒன்றுக்கு எந்த வகையிலும் பொருத்தமற்ற கொள்கைப் பிரடகனம் ஒன்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது.
வடக்கு மக்களின் தேவையை புறக்கணித்து சர்வதேச மட்டத்தில் ஒரு சில தரப்புக்களின் தேவையை நிறைவேற்றும் நோக்கிலேயே கொள்ளைப் பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் மீண்டும் சர்ச்சையை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தவே தமிழ்க் கூட்டமைப்பு முயற்சித்துள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
வடக்கில் தெரிவு செய்யப்படும் முதலமைச்சரினால் அங்குள்ள இராணுவத்தை குறைக்க முடியாது. அந்த அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. பாராளுமன்றத்துக்குக் கூட அந்த அது தொடர்பான அதிகாரம் கிடையாது என்றும் அமைச்சர் குறிப்பிட்;டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாகவும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்தும் விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அமைச்சர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
நாட்டில் ஏற்பட்டுவருகின்ற நல்லிணக்கத்தை குழப்பும் வகையிலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது. வடக்கு கிழக்கு மக்கள் தற்போது அனுபவித்து வருகின்ற அமைதிiயையும் அபிவிருத்தியையும் சுதந்திரத்தையும் குழப்பியடிக்கும் நோக்கிலேயே இந்த கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக நாட்டில் மீண்டும் சர்ச்சையை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்தவே தமிழ்க் கூட்டமைப்பு முயற்சிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இது வடக்கு மக்களின் தேவையை நிறைவேற்றும் நோக்கில் முன்வைக்கப்படவில்லை. மாறாக சர்வதேச மட்டத்தில் சில தரப்புக்களின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலேயே இதனை தயாரித்துள்ளனர். மேலும் முன்னோக்கிப் போகாமல் பின்னோக்கி செல்லும் வகையில் இதனை உருவாக்கியுள்ளனர். மீண்டும் பழைய கோட்பாடுகளையே முன்னெடுக்கின்றனர்.
உண்மையில் வடக்கு மக்களின் தேவையை நிறைவேற்றுவதாயின் கல்வி சுகாதாரம் பொருளாதார அபிவிருத்தி வீடு போக்குவரத்து மின்சாரம் பல்கலைக்கழக வசதி உள்ளிட்ட விடயங்களையே முன்வைக்கவேண்டும். அதனைவிடுத்து வடக்கில் இராணுவத்தை குறைக்கப்போவதாக பிரகடனத்தில் கூறியுள்ளனர். மாகாண சபையினால் எதனை செய்ய முடியும் எதனைய செய்ய முடியாது என்ற விபரமும் இவர்களுக்கு தெரியவில்லை.
வடக்கில் தெரிவு செய்யப்படும் முதலமைச்சரினால் அங்குள்ள இராணுவத்தை குறைக்க முடியாது. ஆந்த அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. பாராளுமன்றத்துக்குக் கூட அந்த அது தொடர்பான அதிகாரம் கிடையாது என்பது சட்டம் படித்தவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
 இதேவேளை முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியது யார் என்பதனை சிந்திக்கவேண்டும். தற்போது கூட வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் கூட்டமைப்பு தடையாகவே செயற்பட்டுவருகின்றது என்றார்.

ad

ad