புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2013

கோத்தபாயவின் இனவாத கருத்துக்கு முஸ்லிம் அமைச்சர்கள் கண்டனம்
இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கொண்டு வர முயற்சிக்கப்படுவதாக கோத்தபாய ராஜபக்ச வெளியிட்ட கருத்தை இரு அரசாங்க அமைச்சர்கள் கண்டித்துள்ளனர்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் இந்தக்கூற்றை கண்டித்துள்ளனர்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாடு ஒன்றில் உரையாற்றிய கோத்தபாய, இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாக எச்சரித்திருந்தார்.
இதனை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம், கோத்தபாயவின் கருத்தால் முழுமையாக முஸ்லிம் சமூகம் அதிருப்தி கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் கோத்தபாய ராஜபக்சவின் கருத்துடன் தாம் பகிரங்கமாக முரண்படுவதாக குறிப்பிட்டுள்ள ஹக்கீம், அவரின் கருத்து தேவையற்ற நிலையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே கோத்தபாய ராஜபக்ச தேவையற்ற ரீதியாக சமய மற்றும் கலாசார விழுமியங்களில் தலையிடுவதை தவிர்த்து, அவற்றை குறிப்பிட்ட மக்களிடம் ஜனநாயக ரீதியில் விட்டுவிடவேண்டும் என்று ஹக்கீம் கோரியுள்ளார்.
இதேவேளை கோத்தபாயவின் கருத்து தொடர்பில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமது கண்டனத்தை அறிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார்.
கோத்தபாயவின் கருத்து சமூகங்களுக்கு மத்தியில் இவ்வாறு புனையப்பட்ட கருத்துக்கள் பரப்படுவதால், அரசாங்கத்துக்கே சர்வதேசத்தில் களங்கம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சுதந்திரத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் பாடுபட்டமையை நினைவுக்கூர்ந்துள்ள அமைச்சர், ஏனைய மதங்களுடன் பிரச்சினைகள் ஏற்படுவதையும் தடுத்துள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்
தனிப்பட்ட சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் எந்த ஒருவரும் இலங்கையில் அடையாளம் காணப்படவில்லை என்பதையும் ரிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பாதுகாப்பு செயலாளர் தமது கருத்தை தெளிவாக்க வேண்டும் என்று ரிசாத் பதியுதீன் கோரியுள்ளார்.

ad

ad