புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2013

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயார.இலங்கைக்கு இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது: பேராசிரியர் ரொஹான் குணரட்ன

உள்நாட்டில் விடுதலைப் புலிகள் முற்றாக தோற்கடிக்கப்பட்டு மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும்,

வெளிநாடுகளில் இயங்கும் புலிகளினால் இலங்கைக்கு இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான கற்கைகளுக்கான பேராசிரியர் கலாநிதி ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.

மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்த இலங்கை அரசாங்கம் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அனைவருடனும் இணக்கப்பாட்டோடு செயற்பட முன்வந்தது. ஆனாலும், வெளிநாடுகளில் இயங்கும் புலிகள் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதுவே சர்வதேச விசாரணைகள் என்கிற கோஷத்தை முன்வைத்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக கூறியுள்ள கலாநிதி ரொஹான் குணரட்ன, இறுதி மோதல்களின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்றார்.

இறுதி மோதல்களின் போது மொத்தமாக ஏழாயிரம் பேரே கொல்லப்பட்டனர். அதில், விடுதலைப் புலி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐந்தாயிரம் பேர் என்று சுட்டிக்காட்டிய அவர், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் 10 வீத தமிழர்களினால் இலங்கைக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தலுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ad

ad