மீனவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக தமிழக-இலங்கை மீனவர்களிடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இலங்கை தலைநகர் கொழும்பில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழக மீனவர்கள், மற்றும் அதிகாரிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை கொழும்பு சென்றனர்.
2ஜி வழக்கு: இன்றுடன் வாக்குமூலம் பெறுவது முடிகிறது
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது.
தமிழ் மக்கள் விடயத்தில் நியாயமாக நடக்காவிடில் அரசில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்வேன்: டக்ளஸ்
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ளத் தவறினால் தான் தொடர்ந்தும் அரசியலில் இருப்பது
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான போராளிகளை இழந்துள்ளோம்: விநாயகமூர்த்தி முரளிதரன்
கடந்த கால யுத்த வடுக்கள் உண்மையில் மறக்கக்கூடியவை அல்ல என்பதுடன், அதை தங்களால் நினைத்துப் பார்க்காமலிருக்கவும் முடியாதென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணிகள் மாறலாம் - இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரம் மாற்றம் ஏற்படலாம் என்பதால், சிலர் பேதங்களை மறந்து வேறு கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பிருப்பதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளர் ராஜா கொலுரே தெரிவித்துள்ளார்.
பெயர்ப்பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டும்!- அமைச்சர் வாசுதேவ உத்தரவு
பெயர்ப் பலகையில் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உத்தரவு
புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் கரிதாஸ் வீட்டுத்திட்டம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை வெட்டி கொலைசெய்துள்ளதுடன் அவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இன்று
பஞ்சாப்-கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐ.பி.எல் இன் 34 ஆவது ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி தலைவர் முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பஞ்சாப் அணிக்கு வழங்கியிருந்தார்.
மோடி மட்டும் ஏன் பேரணி நடத்தக்கூடாது? தேர்தல் கமிஷன் மீது அருண் ஜெட்லி குற்றச்சாட்டு!
பா.ஜ.க., மூத்த தலைவர் அருண் ஜெட்லி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
வாரணாசியில் பேரணி நடத்த மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் மற்றவர்கள் பேரணி நடத்தியுள்ளனர். கெஜ்ரிவால், ராகுல் ஆகியோரும் பேரணி நடத்தினர். ஜெயலலிதா, மம்தா ஆகியோருக்கு பலத்த பாதுகாப்பு உள்ள நிலையிலும் அவர்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளனர்.