புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2019

ஒக்ரோபர் 8இல் மாகாண சபை தேர்தல்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு தெரிவித்த உறுதிமொழி மற்றும் தன்னோடு பேசிய விடயங்களைக் கொண்டு பார்க்கும் போது உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு தெரிவித்த உறுதிமொழி மற்றும் தன்னோடு பேசிய விடயங்களைக் கொண்டு பார்க்கும் போது உரிய காலத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று நம்புவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்த அவர், இதனைத் தெரிவித்தார்.

அதேநேரம் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருக்கிறதெனக் கூறிய அவர், சட்டச் சிக்கலைத் தீர்த்தால் எந்தச் சிக்கலும் இல்லாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும், நீதிமன்றம் அல்லது பாராளுமன்றமே அதற்குரிய தீர்வை எட்டவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

இரண்டு தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்திய முன்னுதாரண அனுபவம் இருப்பதாகக் கூறிய மஹிந்த தேசப்பிரிய, தற்போதைக்குத் தேர்தலில் இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதோ அல்லது வேறு மாற்றங்களைச் செய்வதோ சாத்தியமற்றதெனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் சிவில் அமைப்புகளை நாடியுள்ளதாகத் தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய, உரிய சிக்கல்கள் தீர்க்கப்பட்டால், மாகாண சபை தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

இது சாத்தியமாகும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தலை ஒக்டோபர் 8ஆம் திகதியளவில் நடத்த முடியுமென்றும் அவர் சுட்டிக் காட்டினார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக முடிவுகள் எடுப்பதற்கு எல்லை நிர்ணயம் தடையாக இருக்கிறது. இது தொடர்பாக ஆராய மீளாய்வுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

ஆனால், அந்தக் குழுவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களே வழங்கப்பட்டிருந்ததெனக் கூறும் தேர்தல் ஆணைக்குழு தலைவர், பெயர் மாற்றுவதற்கு, இலக்கங்களை மாற்றுவதற்கு மட்டுமே அதிகார வரையறை இருந்ததாக விளக்கினார்.

கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அவர், ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை நவம்பர் 23 ஆம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்கும் இடையில் கோர முடியும், ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த முடியுமெனக் கூறினா

ad

ad