புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 பிப்., 2014

ஜே.வி.பியின் பிரதேச சபை உறுப்பினர் ஐ.தே.கவில் இணைவு - ஜே.வி.பிக்கு கொள்கை ரீதியான மாற்றம் தேவை
ஜே.வி.பியின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவு செய்யப்பட்ட நிலையில், அந்த கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.களுத்துறை - மத்துகம பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் ஜே.வி.பியின் ஒரே ஒரு உறுப்பினரான பிரியந்த வித்தான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார்.
மத்துகமவில் நடைபெற்ற எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் ஜகத் பின்னகொட கலந்து கொண்ட கூட்டத்தின் பின்னர் ஜே.வி.பியின் உறுப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாக அந்த கட்சியினர் தெரிவித்தனர்.
ஜே.வி.பிக்கு கொள்கை ரீதியான மாற்றம் தேவை - முன்னிலை சோசலிசக் கட்சி
கொள்கை ரீதியான மாற்றங்களே ஜே.வி.பிக்கு தேவை என அந்த கட்சியில் இருந்து விலகிய முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
தேசிய பிரச்சினை தொடர்பான கொள்கை முரண்பாடு காரணமாகவே தமது அணியினர் ஜே.வி.பியில் இருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டமையானது, ஜே.வி.பிக்குள் அத்தியாவசியம் என்பதால் ஏற்பட்டது. அதனை எவரும் எதிர்க்க முடியாது.
கட்சியின் தலைமையில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதன் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
இடதுசாரி கட்சி ஒன்று சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டுமேயன்றி தேசியத்தை அடிப்படையாக கொண்டல்ல. இது அவர்களின் வருடந்த மாநாட்டு தொனிப்பொருளிலேயே தெளிவாக தெரிகின்றது.
தேசியம் தொடர்பான பிரச்சினையை இன்னும் விடாமல் பிடித்து கொண்டிருப்பதே ஜே.வி.பியில் இருந்து நாங்கள் வெளியேற பிரதான காரணமாக அமைந்தது.
கொள்கை ரீதியான பிரச்சினைகளே இடதுசாரிகளுக்கு உள்ளது. இதனால் கொள்கை ரீதியான மாற்றம் அவசியம் என்றார்.

ad

ad