புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2015

பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்தத் தயங்குவது ஏன்?


சிங்களவர்களிடம் இன உணர்ச்சியைத் தூண்டுவதற்கு பிரபாகரன் என்ற பூச்சாண்டி அந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு அவசியப்படுகிறது. ஆனால்,  2009-ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த மாட்டார்கள்.
இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடனில் வெளிவரும் கழுகார் பதில்கள் என்ற பத்தியில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
கேள்வி - பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்தத் தயங்குவது ஏன்?
சிங்களவர்களிடம் இன உணர்ச்சியைத் தூண்டுவதற்கு பிரபாகரன் என்ற பூச்சாண்டி அந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு அவசியப்படுகிறது.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ராஜபக்‌ச பேசும்போது, ‘‘இன்னும் விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. எனக்கு வாக்களித்தால் மட்டுமே அதனை ஒடுக்க முடியும்” என்று சொன்னார்.
எனவே, 2009-ம் ஆண்டின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்பதை அவர்கள் தெளிவுபடுத்த மாட்டார்கள்.
இறுதிக்கட்டத்தில் புலிகள் அமைப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் பற்றி ஒரே ஒருமுறை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பினார். அதற்கு இதுவரை பதில் இல்லை.
அரசாங்க கஜானாவுக்குக் கொண்டு செல்லப்படாத அந்தத் தங்கத்தின் இரகசியம் இன்று வரை அவிழ்க்கப்படவில்லை.
இப்படி எத்தனையோ ரகசியங்கள் கொண்டது ஈழத்தின் இறுதிக்கட்டம். என பதிலளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி - இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எதைக் காட்டுகின்றன..?
ஈழத்தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் தனது ஆட்சியால் எந்த நன்மையும் செய்யாதவர் ராஜபக்ச என்பதைத்தான் இந்த முடிவுகள் காட்டுகின்றன.
அங்கு நடந்தது ராஜபக்‌ச குடும்பத்தின் ஆட்சி. அதனை அதிபர் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் வீட்டுக்கு அனுப்பி உள்ளார்கள் இலங்கை மக்கள். என்றவாறு பதிலளிக்கப்பட்டது.

ad

ad