புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஆக., 2015

சிவாஜி கணேசன் எந்தக் கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல: காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஜெயலலிதா விளக்கம்


தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அப்போது பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி, சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்றார்.

அதற்கு, சிவாஜி கணேசன் எந்தக் கட்சிக்கும் சொந்தக்காரர் அல்ல. காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என்று தனியாக சென்றவர். காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணியை தொடங்கினார் என்று ஜெயலலிதா கூறினார். 

ad

ad