புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஆக., 2016

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை

இவ்வருடத்திற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை (21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

இதில் 350,701 மாணவர்கள் தோற்றுவுள்ளதோடு, நாடளாவிய ரீதியில் 2,959 பரீட்சை மத்திய நிலையங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளை (21) மு.ப. 9.00 மணிக்கு, பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.டி.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

முதலாவது பகுதி (Part I)- மு.ப. 9.30 மணி - மு.ப. 10.15   
இரண்டாவவது பகுதி (Part II)- மு.ப. 10.45 மணி - ந.ப. 12.00

சகல மாணவர்களும், தமது சீருடையின் இடது பக்கத்தில் தமது சுட்டெண்ணை காட்சிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தமது வினாத்தாளில் சுட்டெண்ணை சரியாக குறிப்பிடுமாறு கோரப்பட்டுள்ளனர்.

அத்துடன்   பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி வினாக்களுக்கு விடையளிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை கடமைக்காக 28,000 பேர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ad

ad