புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 ஜன., 2018

கூட்டமைப்புக்கு எதிராக மாற்று அணியில் இணைய தமிழ் மக்கள் பேரவை, ஈபிடிபியை அழைக்கிறார் சுதந்திரக் கட்சி அமைப்பாளர்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளையும் தம்முடன் கைகோர்க்க முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளையும் தம்முடன் கைகோர்க்க முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

தற்போது, அரசாங்கத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட 2 கோடி ரூபா வியடம் அதிகமாக பேசப்படுகின்றது. தேசிய கொள்கை மற்றும் திட்டமிடல் ஊடாக பிரதமரினால் அந்த நிதி வழங்கப்பட்டது. அபிவிருத்திக்காக அந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே 2 கோடி ரூபா நிதி கொடுக்கப்பட்டது. பொது எதிரணியில் உள்ள 50 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படவில்லை. மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) கொடுக்கவில்லை.

ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 16 பாராளுமன்ற உறுப்பினர்களில் 15 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபா கொடுக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்கின்றார்கள். அவ்வாறாயின், தாமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம் என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒத்துக்கொள்கின்றார்களா?

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு, எதிர்க்கட்சியில் இருந்து மக்களின் உரிமைக்காக போராடச் சொல்லி மக்கள் ஆணை கொடுத்துள்ளார்கள். ஆனால், அரசாங்கத்துடன் இருந்துகொண்டு, இங்குள்ள மக்களுக்கு இன்னொரு முகத்தை காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம் என்பதனை ஒத்துக்கொள்கின்றார்கள். கடைசியாக உரிமையும் இல்லை. அபிவிருத்தியும் இல்லை. வீணான பேச்சுக்களைக் காட்டி, உசுப்பேத்தி அரசியல் செய்ய முடியாது என்பது மக்கள் மத்தியில் செல்லும் போது தெட்டத் தெளிவாக தெரிகின்றது.

அதேநேரம், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பாடம் புகட்ட மக்கள் தீர்மானித்துள்ளார்கள். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உரிமையையும் கொண்டு வரவில்லை. அபிவிருத்தியையும் கொண்டு வரவில்லை. அபிவிருத்தி எமது அடிப்படை உரிமை என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மறந்துவிட்டார்கள். யாருக்குமே தனிப் பெரும்பான்மை வரமுடியாத காலகட்டம் உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் அளிக்கும் வாக்கு ஒரே வாக்குதான்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு வெல்லக்கூடிய ஆசனங்களைப் பெறாவிடின், ஐக்கிய தேசிய கட்சி, ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க நினைக்கும். நாம் பாடம் புகட்ட வேண்டுமாயின், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்காமல் விடுவதைப் போன்று, ஐக்கிய தேசிய கட்சிக்கும் வாக்களிக்க சிந்திக்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஏனைய கட்சிகளிடம் வேண்டுகோள் விடுகின்றேன். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான அணியை உருவாக்க வேண்டும்.

அனைவரும் ஒன்று சேர்ந்தால், உள்ளூராட்சி சபையின் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். அவ்வாறு கைப்பற்றும் போது, ஜனாதிபதியுடன் பேசி தேவையான நிதிகளைக் என்னால் கொண்டு வர முடியும். கிராமங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்ற முடியும். தேர்தல் நிறைவடைவதற்குள் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளையும் தம்முடன் கைகோர்க்குமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.