புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 பிப்., 2022

உக்கிரைனின் வான் பாதுகாப்பு சிஸ்டத்தை தமது ஏவுகணை தாக்குதல் முற்றாக அழித்துள்ளது- ரஷ்யா

www.pungudutivuswiss.com
உக்கிரைன் நாட்டின் வான் பாதுகாப்பு திட்டத்தை, தமது ஏவுகணைத் தாக்குதல் முற்றாக அழித்துள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு சற்று முன்னர் தெரிவித்துள்ளது. எல்லையை ஊடுருவி வந்த ரஷ்ய ராணுவத்திற்கும் உக்கிரைன் படைகளுக்கும் இடையே நடந்த நேரடி சமரில், தாம் 50 ரஷ்ய வீரர்களை கொன்றதாக உக்கிரைன் அறிவித்துள்ளது. உக்கிரைன் படைகளில் 40 ராணுவம் இறந்துள்ளதாக உக்கிரைன் தெரிவித்துள்ளது. இது இவ்வாறு இருக்க ஐரோப்பிய ஒன்றியம் , நேட்டோ, மற்றும் பிரிட்டன் இணைந்து மாபெரும் தடைகளை ரஷ்யா மீது விதிக்க உள்ளது. இது ரஷ்யாவை கடுமையாக பாதிக்கும். அதில் ஒன்று தான், SWIFT. ரஷ்யாவின் உள்ள வங்கிகள் எதுவும் இனி SWIFT CODE பாவிக்க முடியாது. அதாவது ரஷ்யாவுக்கு இனி வெளிநாடுகளில் இருந்து பணத்தை ரஷ்ய வங்கிகளுக்கு அனுப்ப முடியாத நிலை தோன்றும். இதனால் ரஷ்யா பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்கும் நிலை தோன்றலாம். இதேவேளை ….
அமெரிக்க ராணுவம் அல்லது வேறு நாட்டு ராணுவம் தமது நாட்டு ராணுவத்தோடு உக்கிரைனில் மோதும் நிலை ஏற்பட்டால்.. தாம் தமது அணு ஆயுதத்தை பாவிக்க தயங்க மாட்டோம் என்ற பொருள்பட ரஷ்ய அதிபர் கடுமையான தொணியில் மிரட்டியுள்ளார்.

ad

ad