புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2022

உக்ரைன் மீது தடைகள் விதிக்காத சுவிட்சர்லாந்து மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் சாடல்

www.pungudutivuswiss.com
உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்துவரும் நிலையில், சுவிட்சர்லாந்து ரஷ்யா மீது தடைகள் எதுவும் விதிக்காததற்காக, ஐரோப்பிய ஒன்றியம் சுவிட்சர்லாந்தைக் கடுமையாக சாடியுள்ளது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் இது ஐரோப்பிய பாதுகாப்புக்கும் நிலைத்தன்மைக்கும் இது ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அது உக்ரைனை மட்டுமல்ல, அது ஐரோப்பாவையே பாதிக்கிறது.

நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை என்று சொல்லவில்லை, ஐரோப்பாவையே பாதிக்கிறது என்கிறோம். சுவிட்சர்லாந்தும் ஐரோப்பாவின் ஒரு பாகம்தானே என்று கூறி சுவிட்சர்லாந்தைக் கடுமையாக சாடியுள்ளார் ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித்தொடர்பாளரான Peter Stano.

ஆகவே, நமது கூட்டாளிகளும், அயலகத்தாரும், நட்பு நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் போலவே, நமது நாடுகள் கட்டப்பட்டுள்ள அடிப்படைக் கொள்கைகளைக் காக்கும் வகையில் நம்முடன் இணைந்து நிற்கவேண்டும். அந்தக் கொள்கைகளில், சர்வதேச விதிகள், ஜனநாயகம் மற்றும் இறையாண்மையை மதிப்பதும் அடங்கும் என்றார் அவர்.  

ad

ad