புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூன், 2022

இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரிட்டன்

www.pungudutivuswiss.com


அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணயமாற்று விபரங்கள் உள்ளடங்கலாக இலங்கையின் பொருளாதார நிலவரத்தை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர் விக்கி ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணயமாற்று விபரங்கள் உள்ளடங்கலாக இலங்கையின் பொருளாதார நிலவரத்தை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர் விக்கி ஃபோர்ட் தெரிவித்துள்ளார்

பிரிட்டன் பொது அவைக்கு எழுத்துமூலம் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அமைச்சர் விக்கி ஃபோர்ட், கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்னர் சுமார் 30 சதவீதமான வருமானத்தைப் பெற்றுக்கொடுத்த சுற்றுலாத்துறையே இலங்கையின் முக்கிய வருமானமீட்டல் துறையாகக் காணப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் கடந்த 2020 ஆம் ஆண்டு சுமார் 80 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்த இலங்கையின் சுற்றுலாத்துறை, 2021 ஆம் ஆண்டில் 60 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது.

அந்நாட்டு சுற்றுலாத்துறைக்கான முக்கிய பங்களிப்பாளராக பிரிட்டன் விளங்குகின்றது. கடந்த மூன்று வருடகாலமாக இலங்கைக்கு மூலப்பொருட்களை விநியோகிக்கும் மூன்று முக்கிய வழங்குனர்களில் இலங்கையும் உள்ளடங்குகின்றது என்றும் பிரிட்டனின் வெளியுறவு அலுவலக அமைச்சர் விக்கி ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த மூன்று வருடகாலத்தில் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பணவனுப்பல்கள் இலங்கையின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவந்திருப்பதுடன் அவை இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் முறையே 8 மற்றும் 9 சதவீதமாக அமைந்துள்ளன.

இருப்பினும் வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களின் பணவனுப்பல்கள் 2021 ஆம் ஆண்டில் 20 சதவீதத்தினால் வீழ்ச்சிகண்டிருப்பதுடன், இது கடந்த 2011 ஆம் ஆண்டின் பின்னர் பதிவான தரவுகளின் பிரகாரம் மிகவும் உயர்வான வீழ்ச்சியாக அமைந்திருக்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதைத் தாம் அங்கீகரிப்பதாகவும், இப்பொருளாதாரத்தை மீண்டும் நிலைபேறான பாதைக்குக் கொண்டுவருவதற்கு அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் மிகவும் ஆழமான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதைத் தாம் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ள பிரிட்டன் அமைச்சர் விக்கி ஃபோர்ட், தமது பிரதமர் கடந்த மேமாதம் 30 ஆம் திகதி இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடியதாகவும் இதன்போது பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான தமது கடப்பாட்டை அவர் மீளவலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad