புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2022

முன்னணி இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை: திரையுலகினர்கள் அதிர்ச்சி

www.pungudutivuswiss.com

தமிழ் சினிமாவில், ஆனந்தம் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து, ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் கோலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அதன்பின் அவர் இயக்கிய அஞ்சான் படம் தோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி அவர் கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டார். அண்மையில், இவரது இயக்கத்தில் வெளியான வாரியர் படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது.

தமிழ் சினிமாவில், ஆனந்தம் படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் லிங்குசாமி. இதையடுத்து, ரன், சண்டக்கோழி, பையா உள்ளிட்ட படங்கள் கோலிவுட்டில் மிகப்பெரிய ஹிட்டடித்தன. அதன்பின் அவர் இயக்கிய அஞ்சான் படம் தோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி அவர் கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டார். அண்மையில், இவரது இயக்கத்தில் வெளியான வாரியர் படம் மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது

இந்நிலையில், நான் ஈ, இரண்டாம் உலகம் படங்களை தயாரித்த பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து 1.03 கோடி ரூபாய் கடனாக பெற்றிருக்கிறார்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக எண்ணி ஏழு நாள் படம் பிரச்சினைகளால் ஆரம்பிக்கபடாமல் போக பிவிபி நிறுவனம் லிங்குசாமியிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதாகவும், அப்போது லிங்குசாமி காசோலையை கொடுத்ததாகவும் தெரிகிறது.

ஆனால், செக்கில் பணம் இல்லாததால் லிங்குசாமி கொடுத்த செக் பவுன்ஸ் ஆனது. இதனால் அதிர்ச்சியடைந்த பிவிபி நிறுவனம் லிங்குசாமி மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ad

ad