புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஆக., 2022

ஸ்கொட்லாந்து பெண்ணை நாட்டிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு!

www.pungudutivuswiss.com



காலிமுகத்திடல் அரகலயவை  ஆதரித்தார் என்ற சர்ச்சையில் சிக்குண்டுள்ள ஸ்கொட்லாந்து பெண்ணை  நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார் என குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலிமுகத்திடல் அரகலயவை ஆதரித்தார் என்ற சர்ச்சையில் சிக்குண்டுள்ள ஸ்கொட்லாந்து பெண்ணை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார் என குடிவரவு குடியகல்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

குடிவரவுகுடியகல்வு துறைகுறித்த விவகாரங்களை தன்வசம் வைத்துள்ள ஜனாதிபதி ஸ்கொட்லாந்தை சேர்ந்த கெய்லே பிரேசரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான உத்தரவை கடந்த வாரம் பிறப்பித்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ம் திகதி பிரேசர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அவரை உடனடியாக கடவுச்சீட்டை கையளிக்குமாறு உத்தரவிட்டிருந்தனர்.மேலும் அவரை ஒரு வாரகாலத்திற்குள் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு கோரியிருந்தனர்.

குடிவரவு துறை அதிகாரிகள் தனது வீட்டிற்கு வந்ததையும் தன்னை விசாரணை செய்ததையும் பிரேசர் வீடியோவில் பதிவு செய்து நேரடி ஒளிபரப்பு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து சமூக ஊடகங்கள் மூலம் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களை வெளியிட்டமைக்காக அதிகாரிகள் அவரை கைதுசெய்ய முயல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உருவானது.

இதன் பின்னர் 11ம் திகதி அவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்,அதனை தொடர்ந்து அவர் 15 திகதிக்குள் நாட்டிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து அவர் தான் நாட்டிலிருந்து வெளியேறவேண்டும் என்ற உத்தரவை இரத்துச்செய்யுமாறு கோரி நீதிமன்றத்தில் ரிட்மனுவை தாக்கல் செய்திருந்தார்.எனினும் நீதிமன்றம் அவரது வேண்டுகோளை நிராகரித்திருந்தது.

எனினும் நீதிமன்றத்தின் உத்தரவு வெளியானதும் கெய்லே பிரேசர் காணாமல்போயுள்ளார்.அவர் கைதுசெய்யப்படுவதை தவிர்க்க முயல்கின்றார் என குடிவரவுதுறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கெய்லே பிரேசர் 2019 இல் மருத்துவ காரணங்களிற்காக இலங்கைக்கு வந்தார் என தெரிவித்துள்ள குடிவரவு துறை அதிகாரிகள் அவர் தான் முதுகுவலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுதேசிய மருத்துவ கிசிச்சையை நாடவுள்ளதாகவும் தனது விசா விண்ணப்பத்தில் தெரிவித்திருந்தார் என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் தங்களின் சமீபத்தைய விசாரணைகளின் போது அவர் அவ்வாறான சிகிச்சை பெறாததும் மாறாக மருந்துகளை ஊக்குவிக்கும் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

உளவியல் சிகிச்சைசையும் ஆண்பெண்உறவுகளால் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களிற்கு அவர் சிகிச்சை வழங்கிவந்தார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் தனது இணையத்தளத்தை இந்த நோக்கங்களிற்காக பயன்படுத்தினார் மனநலசிகிச்சை மற்றும் ஆற்றுகைப்படுத்தலில் தன்னை நிபுணர் என அவர் அறிமுகப்படுத்தினார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாகவே அவரை நாட்டை விட்டு வெளியேற சொன்னோம் அவர் தனது விசா நிபந்தனைகளை மீறிவிட்டார் என சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

காலிமுகத்திடல் அரகலய குறித்து அவரை விசாரணை செய்வதாக தெரிவிக்கப்படுவது உண்மைக்கு புறம்பான் விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடிகயல்வு துறைக்கு பொறுப்பாக உள்ள ஜனாதிபதிக்கு தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் வெளிநாட்டவர் ஒருவரை இலங்கையிலிருந்து வெளியேற்றுவதற்கான அதிகாரம் உள்ளது.

ஸ்கொட்லாந்து பெண்மணியை கண்டுபிடித்து வெளியேற்றுவதற்கு உதவுமாறு குடிவரவு துறையினர் பொலிஸாரையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ad

ad