புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2013


திருமண ஆசை காட்டி பல முறை கற்பழித்த பாதிரியார் 
 திருமண ஆசைகாட்டி சீரழித்து பலமுறை கர்ப்பத்தை கலைத்துவிட்டு தன்னை ஏமாற்றிய பாதிரியார் மீது நர்ஸிங் மாணவி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். விழுப்புரத்தைச் சேர்ந்தவர் காவ்யா(25

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நளினி – முருகன் இன்று சந்திப்பு 
தமிழகத்தின் வேலூர் சிறையில் சில மாதங்களுக்கு முன்னர் பொலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முருகன் அறியில் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட 13 வகையான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிசார் குற்றஞ்சுமத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை சந்தேக நபர், முருகன் அறையில் இருந்து சிம்கார்டு, மெமரிகார்டு, ஹெட்போன் என்பன சிக்கியது என்று கூறபடுகிறது. தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியது தொடர்பாக முருகன் மீது சிறைதுறை நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வவுனியா பற்றைக் காட்டில் இராணுவ வீரரின் சடலம் மீட்பு

ஹிங்குராங்கொட பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.பிரியந்த குமார (வயது 31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.வவுனியா, நாவற்குளம் கிராமத்திலுள்ள பற்றைக் காட்டிலிருந்து இராணுவ வீரரொருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை

பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் வெடி மருந்து மீட்பு
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து இன்று வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பா.உ. சி.சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் வினோதமான விசாரணையும்! அம்பலத்துக்கு வந்த சில நடவடிக்கைகளும்-TAMILWIN
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் வரலாற்றில் என்றுமில்லாத வினோதமான விசாரணை நடவடிக்கையொன்றினை இன்று இராணுவத்தினரும், பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரும் நடத்தியிருக்கின்றனர்.

பூந்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் இருபது நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக்கோரியும். செங்கல்பட்டு மற்றும் பூந்த்தமல்லி சிறப்பு முகாம்களை இழுத்து மூடக்கோரும் ஆர்ப்பாட்டமானது மே-17 இயக்கத்தால் நேற்று செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒருங்கிணைக்கபட்டது.



மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகளை காணவில்லை: ரிஸானாவின் தயார்

மகளுக்கு விடுதலை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசியல்வாதிகள் ஒருவரையும் இப்போது காணவில்லை. என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்கள். நான் மகளைப்


ஐந்நூறு பேரின் மரணத்துக்கு மத்தியிலேயே புதிய பிரதம நீதியரசரை நியமிக்க வேண்டிவரும்: அசாத்சாலி

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையில் அரசாங்கம் வெற்றிபெறலாம். ஆனால் முடியுமானால் புதிய பிரதம நீதியரசரை நியமிக்குமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகின்றோம்.


அடுத்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ?

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதானா குற்றப்பிரேரணை பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து நேற்று இரவு குறித்த அறிக்கை ஜனாதிபதியின் ஒப்புதல் கையொப்பத்தினை பெரும் பொருட்டு ஜனாதிபதியிடம்

இலங்கை இளைஞர் ஒருவருக்கு கட்டாரில் உள்ள நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

வெங்கடாசலம் சுதேஷ்கர் என்ற 22 வயதான இளைஞருக்கே கட்டாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கட்டார் தூதரகத்தின் மூலம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம்ஜெத்மலானியை மீண்டும் பாஜகவில் சேர்க்க முடிவு
கட்சி மேலிடத்துக்கு எதிராக பேசியதற்காக, பா.ஜ.,விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ராம்ஜெத் மலானியை, மீண்டும் கட்சியில் சேர்க்க, பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.


நடிகர் ஜெகதிஸ்ரீகுமார் என் தந்தை: ஐகோர்ட்டில் இளம்பெண் வழக்கு
 

பிரபல மலையாள காமெடி நடிகர் ஜெகதிஸ்ரீகுமார். குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவர் கடந்த வருடம் விபத்தில் சிக்கி காயமடைந்தார். வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தற்கொலை செய்ததாக எழுதி வாங்கிவிட்டு மகளை கொன்ற தந்தை
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் 23 வயது மகளை கொலை செய்ததாக பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிரமித்த இடத்தை இடித்து தள்ளிய
 மீனவர்கள்- பதற்றத்தால் போலீஸ் குவிப்பு 
சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே மீனவக் கிராமத்தை மத்திய  நிதியமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் ஆக்கிர மித்துக் கட்டியதாகக் கூறப்படும் சுவரை,  இன்று

12 ஜன., 2013


ரிஸானா

OlehArulezhilan
January 11, 2013

30-01-2007
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.
எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன். ஐய்ரோப்பாவைச் சார்ந்த எவர் ஒருவரும் இப்படியான தண்டனைகளுக்கு சவுதியில் உள்ளாக முடியாது என்பதெல்லாம் தனிக்கதை. எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதையொட்டி சவுதி மன்னராட்சி மேற்குலகோடு செய்து கொண்ட தொழிலாளர், மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சவுதி அரேபியச் சட்டங்களின் படி ஐய்ரோப்பியர்களை தலை வெட்டித் தண்டிக்க முடியாத விலக்கை அளிக்கிறது. ரிஸானா வெள்ளை தேசத்தவராக இருந்தால் நிச்சயம் இந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்காது.
குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.

4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்த  ஜெயலலிதா மீதான குற்றவியல் வழக்கு ரத்தானது.  ஜெயலலிதாவின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் தொடர்ந்த குற்றவியல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது
மேலும் திமுக குப்புசாமி தொடர்ந்த மூல வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரிக்க அனுமதி வழங்கியும், ஜெ.மீதான வழக்கை சென்னை ஐகோர்ட் 4 மாதத்தில்  விசாரித்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  


தயாநிதிமாறன் வழக்கு:
சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக, தயாநிதி பதவி வகித்த போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன் சகோதரருக்கு சொந்தமான, "டிவி' நிறுவனத்துக்கு, 323 தொலைபேசி இணைப்புகளை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, சி.பி.ஐ., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, சுப்ரீ

பிரேரணை நிறைவேற்றத்தின் போது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறைகள் தவறானவை! அமெரிக்கா
இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஒழுங்குமுறைகள் தொடர்பில் அமெரிக்கா, தமது கவலையை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டே ரிசானாவிடம் குற்றப்பத்திரிகையில் கையொப்பம் பெறப்பட்டது! மரண தண்டனை கண்டிக்கத்தக்கது! – நவநீதம்பிள்ளை
ரிசானா நபீக் சவூதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கண்டித்துள்ளார்.

சவுதி அரேபிய சிறைச்சாலைகளில் இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் மரண தண்டனையை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ரஞ்சன் நாமநாயக்க தெரிவித்தார்.
அவர்கள் மீது இப்போது மதரீதியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அது ரிசானாவைப் போலவே மரண தண்டனைக்கு வழி வகுக்கக் கூடும் என அவர்கள்

ad

ad