புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2013


பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் வெடி மருந்து மீட்பு
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து இன்று வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீ - 4 ரக வெடிமருந்தே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அமைப்பாளர் வேழமாலிதன், கூட்டமைப்பின் ஆதரவாளரான வசந்தன் என்பவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களோடு பா.உறுப்பினர் சிறிதரனின் அலுவலகத்தில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் கொழும்பில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் பா.உ.சிறிதரனுக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகப்பு தளர்த்தப்பட்டபோதிலும், மீண்டும் இதுவரையில் பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள சிறிதரனின் அலுவலகத்திற்கு இன்று மாலை 3:00 மணியளவில் வந்த பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் அலுவலகத்தை சோதனையிட்டு, பையொன்றினுள் வெடிமருந்து இருந்ததாக எடுக்கப்பட்டு அமைப்பாளர் வேழமாலிதனையும், ஆதரவாளரான வசந்தனையும் கைதுசெய்துள்ளனர் என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
வன்னியில் பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுவது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த சிறிதரன், சில வாரங்களுக்கு முன்பு கல்விப் பணியில் இராணுவம் ஈடுபட உத்தேசித்துள்ளதையும் விமர்சித்திருந்தார்.

 ஏற்கனவே தனக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ad

ad