புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2013


டோக்கியோ வாழ் தமிழர்கள் கையளித்த மனு!

இந்தியாவின் தார்மீக பலம் என்பது, அது அறத்தின் வழியில் நிற்பதில்தான் அடங்கியுள்ளது. அதிகாரிகளின் வெற்று ராஜ தந்திர நடவடிக்கைகள் மூலம் ஈழதமிழர்களை மட்டுமல்ல, இந்திய தமிழர்களையும் புண்படுத்தி வருகிறது என்பதை இந்திய அரசியல்வாதிகள் புரிந்துக் கொள்ள வேண்டும். 

இது வரையிலான மாணவர் போராட்டம் ஒரு சில சிறிய நிகழ்வுகளை தவிர்த்து காந்திய வழியில் அறபோராட்டமாகவே நிகழ்ந்து வருகிறது. மேலும் மாணவர்கள் தன்னிச்சையாக உணர்வின் கொந்தளிப்பிலேயே தமது கோரிக்கைகளை வடிவமைத்து உள்ளார்கள் என்பதை, அந்த கோரிக்கையை கொண்டே நாம் புரிந்து கொள்ளலாம். அதில் உள்ள ஒரு சில சாத்தியமில்லாத கோரிக்கைகளை கொண்டு, மாணவர்களின் மொத்த போராட்டத்தையும், அதில் உள்ள உண்மையையும், நமது அறிவாளிகள் நிராகரிப்பது வேடிக்கையானது என்றாலும் இது எப்போதும் நிகழ்ந்து வரும் வாடிக்கையான ஒன்றுதான். 

ஜப்பான் வெளியுறவுதுறை அதிகாரிகளிடம் நாங்கள் அளித்த மனு பற்றிய விவரங்களை கிழே காணலாம். ஜப்பான் வெளியுறவுதுறையிடம் டோக்யோ வாழ் தமிழர்களின் கோரிக்கை

எமது வேண்டுகோளை ஏற்று, டோக்யோவில் வசிக்கும் 30க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள், திங்கள் கிழமை (18 மார்சு) மதியம் 1 மணி அளவில், ஜப்பான் வெளியுறவுதுறையின் அலுவலகத்தின் முன் திரண்டனர். நால்வர் மட்டுமே மேற்கு ஆசியாவின் வெளியுறவுதுறையின் தலைமை இயக்குனர் திரு மகோட்டோ மாசுதா(Makoto Masuda san) அவர்களை சந்திக்கும் இயலும் என்று கூறியதால், திரு அருள், திரு குகன், திரு பாலு அவர்களுடன் நானும் (செந்தில்குமார்) இணைந்து எமது கோரிக்கையை இயக்குநர் அவர்களிடம் விளக்கி கூறினோம். ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள் எமது கோரிக்கையை பொறுமையுடன், மிகுந்த கனிவுடனும் இயக்குநர் அவர்களும், வெளியுறவுதுறையின் ஓசாகி (Takeshi Ozaki) அவர்களும் இணைந்து செவிமடுத்தார்கள். 

எமது முக்கிய கோரிக்கைகள் பின் வருமாறு,

1. 2009 மே மாதம் நிகழ்ந்த இனபடுகொலை மற்றும் போர்குற்றங்கள் குறித்து, ஐக்கிய நாட்டு சபையின் மூலம் சுதந்திரமான முறையில் விசாரணை மேற்கொள்ளபட்டு, குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும்(ACCOUNTABILITY).

2. ஐக்கியநாட்டு சபையில், இலங்கையின் போர்குற்றங்களுக்கு எதிராக இந்த வார இறுதியில் அமெரிக்காவினால் கொண்டுவரபட இருக்கிறது. சென்ற ஆண்டு (2012) மார்சு மாதம், இதே மாதிரியான ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்ததது. இருப்பினும் ஈழதமிழர்களுக்கு அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை. நிரந்தர தீர்வு என்பது, உலக நாடுகளின் மேற்பார்வையில், ஈழதமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு (UN REFERENDUM) எடுக்கபபட்டு, அவர்களின் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்யும் வகையில் சுய நிர்ணய உரிமை வழங்கபட வேண்டும். 

3. தமிழர்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு பகுதியில் சிங்களர் குடியேற்றம் தடுத்து நிறுத்தபட வேண்டும் (STOP THE ETHNIC CLEANSING).

4. இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட்டு, தமிழர்களின் பூர்வீக தாயகமான வடகிழக்கு பகுதியில் நிகழும் நிகழ்வுகள், வெளி உலகிற்க்கு தெரியபடுத்தபட வேண்டும்.

5. இலங்கையில் தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை, இலங்கையின் இனவாத அரசுக்கு, ஜப்பான் அரசு செய்து வரும் உதவிகளை நிறுத்தி வைக்க வேண்டுமாய் கோருகிறோம். 

6. 60 ஆண்டுகாலமாக தொடரும் போராட்டத்தினாலும், இனபடுகொலை சம்பவங்களினாலும், இனி தமிழர்களும், சிங்கள மக்களும் இணைந்து வாழ்வது என்பது சாத்தியமில்லாத நிலையை எட்டியுள்ளது. இதை உலக நாடுகள் புரிந்துக் கொண்டு, தமிழர்களின் நீண்ட கால கோரிக்கையான தமிழ் ஈழம் குறித்து, ஈழ தமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு எடுக்க உதவ முன்வர வேண்டும். ஜப்பான் அரசு, அந்த முயற்சியை முன்னெடுக்க கோருகிறோம். 



போன்ற எமது கோரிக்கைகளை விளக்கி கூறியபின், ஆங்கிலத்திலும், ஜப்பானிய மொழியிலும் நாம் தயார் செய்திருந்த மனுவை அனைவரும் கையெழுத்திட்டு இயக்குநர் அவர்களிடம் வழங்கினோம். 

இலங்கை இனவாத அரசின் போர்குற்ற ஆதாரங்களை விளக்கி கூறி, சமிபத்தில் வெளியான பாலசந்திரன் புகைபடம் குறித்தும் எடுத்து கூறினோம். அப்போது இயக்குநர் கேட்ட கேள்வி, எங்களை சங்கடத்தில் ஆழ்த்தியது. அந்த புகைபடத்தின் உண்மைதனம் குறித்து உங்களது வெளியுறவுதுறை அமைச்சர் சல்மான் குர்ஷித் சந்தேகம் எழுப்பியுள்ளாரே என்று அவர் கேட்ட போது, இலங்கை விவாகாரத்தில் இந்தியாவின் நிலையை உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்ற சூழ்நிலையில், நமது அமைச்சர்கள், தமிழர்களின் உணர்வை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து அலட்சியமாக பேசி வருவது மிகுந்த வருத்தத்தை அளித்தது. 

இருப்பினும் எங்களால் இயன்ற வரையில் , ஈழதமிழர்களின் போராட்ட வரலாற்றையும், தற்போதைய நிலையும் விளக்கி கூறி, ஜப்பானின் உதவியை கோரியுள்ளோம். 

இந்த முயற்சியை சாத்தியமாக்கிய திரு அருள், நண்பர் குகன், நண்பர் பாலு, துரை, ஒரே இரவில் ஜப்பானிய மொழியில் மொழியாக்கம் செய்து உதவிய திரு கோவிந்த், இபராக்கியில் இருந்து, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்க்காகவே வருகை தந்த திரு வினோத் ராஜ், தமது குழந்தைகளுடன் வீசியடித்த காற்றையும் பொருட்படுத்தாது குவிந்த தமிழ் தாய்மார்கள், கடுமையான அலுவல்களுக்குமிடையிலும், முன்னதாகவே வந்திருந்து கலந்துக் கொண்ட ஆறுமுகம் போன்ற சொந்தங்களை காணும் போது ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது.. இனியும், தமிழன் தனியன் அல்ல.

ad

ad