புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஏப்., 2013


கனடாவில் முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வீடுகளின் விலை $300,000


சமீபத்திய Bank of Montreal கணிப்பின் படி  கனடாவில் வீடு வாங்குபவர்கள் சராசரியாக 29 வயது என்றும் வீடுவாங்கும் போது $300,000
விலையான வீடொன்றிற்கு $48,000 முற்பணமாக எதிர்பார்க்கப்படுகின்றதென்றும் சமீபத்திய Bank of Montreal கணிப்பின் படி தெரியவந்துள்ளதாக அறியப்படுகின்றது.
வீடு வாங்குபவர் வசிக்குமிடத்தைப் பொறுத்து விலை வேறுபாடுகளும் காணப்படுமென மேற்படி கணிப்பில் தெரியப்படுகின்றது.
அட்லான்ரிக் கனடா பகுதியில் முதல் தரம் வீடு வாங்குபவர்கள் சராசரியாக $224,000 எதிர்பார்க்கும் அதே நேரத்தில் பிரிட்டிஸ் கொலம்பியாவில் சராசரியாக $454,000 எதிர்பார்க்கப்படுகின்றது.
பொது மதிப்பீட்டின் படி மிக விலையுயர்ந்த நகரமாகக் கருதப்படும் வன்கூவரில் சராசரியாக ஒருவீட்டின் விலை $539,000 என்றும் கல்கரியில் 474,000 டொலர்களென்றும் ரொறொன்ரோவில் $446,000 என்றும் தெரியவந்துள்ளது.
சராசரியாக முதல் தரமாக வீடு வாங்குபவர்கள் தங்கள் வீட்டின் அடைமானத் தொகையை 20 வருடங்களில் செலுத்தி முடிக்கத் திட்டமிடுவதாகவும், 20 வீதமானவர்கள் அதற்கு முன்னதாகவே செலுத்தி முடிக்க முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
23 சதவீதமானோர் 25 வருடங்கள், 16 சதவீதமானோர் 20௨4 வருடங்கள், 20 சதவீதம் 10௧9வருடங்களெனவும் அறியப்படுகின்றது. இதேவேளை வீட்டைத்தங்களது சொந்தமாக்குவதற்ககு 25 வருடங்களுக்கும் மேலாகும் என்றும் 7 சதவீதமானோர் கூறும் வேளையில் தங்களால் 1வருடத்திற்கும் 9வருடங்களுக்குமிடைப்பட்ட காலத்திற்குள் அடைக்கமுடியுமெனக் கூறுவதாகவும் தெரியவந்துள்ளது.
இது தவிர 31 சதவீதமானோர் தங்களால் அடைமானத் தொகை செலுத்துவதை நிறுத்தமுடியுமெனத் தெரியாதென ஒத்துக்கொள்வதாகவும் மதிப்பீட்டின் மூலம் தெரியவந்துள்ளதாக அறிய வருகின்றது.

ad

ad