புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2013


படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 75 இலங்கை அகதிகளும் பிணையில் விடுதலை!
சட்டவிரோத படகில் அவுஸ்திரேலியா சென்றநிலையில் நடுக்கடலில் கைதாகி புழல்சிறையில் அடைக்கப்பட்டிருந்த 75 இலங்கைத் தமிழ் அகதிகளும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிலிருந்து 120 பேர் அனுமதியின்றி வெளியேறி நாகை வேளாங்கண்ணியிலிருந்து கடல் மார்க்கமாக ஒரு படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்றனர். சனிக்கிழமை அதிகாலை படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக .அவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர்.

இதையடுத்து தமிழக கடலோர காவல்படை மற்றும் இந்திய கப்பல் படையினர் அகதிகளை மீட்டு கரையேற்றினர். கரையேற்றபட்ட 120 அகதிகளில் பெண்கள், சிறுவர்கள் குழந்தைகள் தவிர 75 ஆண்கள் அடங்குவர்.
இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாகை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அப்போது 75 அகதிகளையும் 10.04.2013  புதன்கிழமை வரை நீதிமன்றக் காவலில் வைக்க நாகை குற்றவியல் நீதிபதி சரஸ்வதி உத்தரவிட்டார்.
இதன்படி 75 அகதிகளும் புழல் சிறையில அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் நிறைவு நாளான இன்று புதன்கிழமை மாலை 75 அகதிகளும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரபட்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அப்போது 75 பேரையும் நீதிபதி சரஸ்வதி தனது அதிகாரத்தின் பேரில் பிணையில் விடுவிப்பதாக உத்தரவிட்டார். ஒரிரு நாட்களில் அகதிகள் அனைவரும் தங்கள் முகாம்களுக்கு அனுப்பபடுவார்கள் எனத் தெரிகிறது.

ad

ad