-
26 டிச., 2025
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2025 உலகம் அ+ அ- Jelensky 2023 06 27 கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரஷ்யா - உக்ரைன் இடையே விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அமெரிக்கா தயாரித்த 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக் கொண்டது. உக்ரைனின் இறையாண்மை உறுதி செய்யப்படும். இதனை அனைத்து தரப்பும் கையெழுத்து மூலம் உறுதி செய்யப்படும். இது ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே ஒரு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்பது போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இன்னும் சில பிராந்திய பிரச்சினைகள் மட்டுமே விவாதிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே இதை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டு உள்ளார். இதையடுத்து அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஏற்றுக் கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரஷ்யா - உக்ரைன் இடையே விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அமெரிக்கா தயாரித்த 20 அம்ச திட்டம் கொண்ட அமைதி ஒப்பந்தத்தில் பெரும்பாலானவற்றை உக்ரைன் ஏற்றுக் கொண்டது. உக்ரைனின் இறையாண்மை உறுதி செய்யப்படும். இதனை அனைத்து தரப்பும் கையெழுத்து மூலம் உறுதி செய்யப்படும்.
இது ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே ஒரு முழுமையான மற்றும் நிபந்தனையற்ற ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்பது போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. இன்னும் சில பிராந்திய பிரச்சினைகள் மட்டுமே விவாதிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே இதை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொண்டு உள்ளார். இதையடுத்து அமெரிக்கா மற்றும் உக்ரைன் ஏற்றுக் கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தம் ரஷ்யாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.