புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2018

தமிழ்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட ஜேவிபி விருப்பம்!

ஜேவிபியும் தமிழ்தேசிய கூட்டமைப்பும் ஒடுக்குமுறை அரசாங்கங்களால் பாதிக்கப்பட்ட
தரப்பினரை தெற்கிலும் வடக்கிலும் பிரதிநிதித்துவம் செய்கின்றன என தெரிவித்துள்ள ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக இணைந்து போராடவேண்டிய கடமை எங்களுக்குள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளும் கொள்கையின் அடிப்படையில் பணியாற்றுகின்றன எனவும் தெரிவித்துள்ள அனுரகுமார திசநாயக்க அவ்வாறான அணுகுமுறையை கொண்டுள்ள  கட்சிகள் இணைந்து பணியாற்ற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சில விடயங்கள் தொடர்பில் எங்கள் மத்தியில் கருத்துவேறுபாடுகள் உள்ளபோதிலும் எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ள ஜேவிபி தலைவர் ஜேவிபியிடம் இரகசிய நிகழ்ச்சிநிரல் இல்லை தமிழ்தேசிய கூட்டமைப்பிடமும் அவ்வாறான இரகசிய நிகழ்ச்சி நிரல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வெளிப்படை தன்மை காணப்படுவதால் ஒருவருக்கு மற்றையவரின் நிலைப்பாடு தெரியும் என்பதால்  நாங்கள் சிறப்பாக இணைந்து செயற்பட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கியதேசிய கட்சியும் மகிந்த ராஜபக்ச தரப்பினரும் சர்வதேசமூகத்திற்கு காண்பிப்பதற்காகவும் தங்கள் பலத்தை காண்பிப்பதற்காகவும் தமிழ்தேசிய கூட்டமைப்பினை பயன்படுத்தியுள்ளனர் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளின் தலைவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் நேர்மையாக நடந்துகொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ள ஜேவிபி தலைவர்  அவர்கள் தங்கள் நலனிற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை பயன்படுத்தினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ad

ad