புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2022

நிபந்தனைகளுடனேயே உதவிகளை வழங்க வேண்டும்

www.pungudutivuswiss.com

ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி நேர்மை மற்றும் மனித உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்காக சர்வதேச சமூகம் இலங்கைக்கான உதவிகளை நிபந்தனைகளுடன் வழங்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி நேர்மை மற்றும் மனித உரிமை ஆகியவற்றை பாதுகாப்பதற்காக சர்வதேச சமூகம் இலங்கைக்கான உதவிகளை நிபந்தனைகளுடன் வழங்கவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்

ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமை பாதிக்கப்பட்டதால் நாட்டின் ஜனநாயகம் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது சட்டத்தின் ஆட்சியில் படிப்படியாக இடம்பெற்ற வீழ்ச்சியும் அரசியல் தலைவர்கள் நீதித்துறையில் தலையிட்டமையுமாகும், இதனால் நீதி என்பது எங்கள் மக்களிற்கு சாத்தியமில்லாத விடயமாக மாறியுள்ளது இதனை மாற்றியமைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது எங்கள் அரசியல் அமைப்பில் ஊழல் என்பது அதிகமாக காணப்படுகின்றது ஒரு சிலர் அல்லது சில குடும்பங்கள் முடிவற்றவிதத்தில் பணம் உழைக்கின்றனர் சம்பாதிக்கின்றனர் அதேவேளை பல குடும்பங்கள் வறுமையில் சிக்குண்டுள்ளன என கர்தினால் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த ஊழல் நிறுத்தப்படவேண்டும் அதனை நிறுத்துவதற்கான வலுவான முறையை உருவாக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவதாக மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கின்றன மக்கள் எவ்வளவு தூரம் எதிர்க்கின்றார்களே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்களோ அரசாங்கங்கள் அவ்வளவிற்கு அதிகளவு ஒடுக்குமுறை மிகுந்தவையாக மாறியுள்ளன,ஆகவே பதில் இல்லாத பல கேள்விகள் உள்ளன என கர்தினால் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்த தவறுகளை சரிசெய்யவேண்டும் என சர்வதேச சமூகம் அழுத்தங்களை கொடுக்கவேண்டும், என வேண்டுகோள் விடுத்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் தொடர்ந்தும் ஊழல் இடம்பெறாத விதத்தில் உதவிகளை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினை மிகப்பெரியது தவறான கொள்கைகளும் தவறான நிர்வாகமுமே இதற்கு காரணம் நாடு அதலபாதளத்தில் வீழ்;ந்துள்ளது நாங்கள் நிதி நெருக்கடியின் மத்தியில் இருக்கின்றோம், பலர் வேலைவாய்ப்பில்லாத அல்லது போதியவேலைவாய்ப்பு இல்லாத நிலையில் உள்ளனர் இதன் காரணமாக பல குடும்பங்கள் வருமானம் அற்ற நிலையில் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கம் ஊக்குவித்த பயனற்ற திட்டங்களிற்காக வெளிநாடுகளிற்கு பாரிய கடனை செலுத்தவேண்டியுள்ளது இந்த திட்டங்கள் மக்களின் அபிவிருத்திக்கு பதில் தனிப்பட்ட நபர்களிற்கு உதவியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டங்கள் நாட்டில் பாரிய கடன்நெருக்கடியை உருவாக்கியுள்ளன இதிலிருந்து எவ்வாறு மீள்வது என தெரியாத நிலையில் நாங்கள் உள்ளோம் எங்கள் தேசிய வருமானமும் உற்பத்தி திறனும் வீழ்ச்சியடைந்துள்ளது இதன் காரணமாக மக்களின் அடிப்படை தேவைகளான மின்சாரம் போன்றவற்றை வழங்கமுடியாத நிலையில் உள்ளோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிற்கு உதவுவதற்காக பரிசுத்த பாப்பரசர்100,000 யூரோக்களை அனுப்பியமைக்காக நன்றியுடையவனாக உள்ளேன் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் பெப்ரவரியில் நான் பரிசுத்த பாப்பரசரை சந்திப்பதற்காக ரோமிற்கு வந்தவேளை மக்களின் நலன் குறித்து அவர் கேட்டறிந்தார்,அவர்கள் எப்பிடி இருக்கின்றார்கள் என கேட்டு அவர்கள் குறித்த கரிசனையை வெளிப்படுத்தினார் தங்களால் நிதிஉதவி செய்யமுடியுமா என கேட்டார் நான் ஆம் என்றேன் என கர்தினால் தெரிவித்துள்ளார்.

   
   

ad

ad