புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2022

கோடிக் கணக்கில் நஷ்டஈடு! - மைத்திரி விசனம். [Friday 2022-08-19 06:00]

www.pungudutivuswiss.com

நல்லாட்சி காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டு, சில தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு கோடிக் கணக்கில் நஷ்ட ஈடு செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றமையை சுதந்திர கட்சி கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது.

நல்லாட்சி காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டு, சில தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு கோடிக் கணக்கில் நஷ்ட ஈடு செலுத்துவதற்கு அரசாங்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றமையை சுதந்திர கட்சி கடுமையாக எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது

நாட்டை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்ப்பதற்கான அனைத்து ஆற்றல்களையும் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் பயன்படுத்த வேண்டுமே தவிர, மக்களின் பணத்தை வீணடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2015 - 2019 வரை நல்லாட்சி காலத்தில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளனதாகக் குறிப்பிட்டு, அரச அதிகாரிகள் மற்றும் நிறுவனப் பிரதானிகள் சிலருக்கு கோடிக்கணக்கில் நஷ்ட ஈட்டை செலுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு நஷ்ட ஈட்டினை செலுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள பெயர்ப்பட்டியல் தொடர்பில் ஆராய்ந்த போது , அந்த பட்டியலில் காணப்பட்ட பெரும்பாலானவர்களது பெயர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டவர்களதாகவே காணப்பட்டன.

எனவே அவர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் எனக் கூறுவது பொறுத்தமற்றது. நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடிகள் நிலவுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட விசேட தரப்பினருக்காக கோடிக் கணக்கில் நஷ்டஈட்டை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் , அதனை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடுமையாக எதிர்ப்பதோடு , அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் செயற்பாடாக அமைய வேண்டியது , நாட்டை பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீட்ப்பதற்கு சகல ஆற்றலையும் பயன்படுத்த வேண்டியதாகும். மாறாக மக்களின் பணத்தை வீணடிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad