புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2022

யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயர் அதிகாரி!

www.pungudutivuswiss.com

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்று வெள்ளிக்கிழமை  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்

காலை யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் க.மகேசனை டேவிட் மெக்லாக்லன்-கார் சந்தித்தார். இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் உடனிருந்தார்.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் காரணமாக வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழிலுக்கு உள்ள சவால்கள் குறித்து அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்தேன் என டேவிட் மெக்லாக்லன்-கார் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் கடந்த ஓகஸ்ட் 16ம் திகதி இலங்கைக்கு வருகை தந்ததுடன் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டு பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ad

ad