சீனத் தயாரிப்பான ஆட்லறிகள் புலிகளுக்கு எவ்வாறு கிடைத்தன? இலங்கை இராணுவம் அதிர்ச்சி
முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் 5 ஆட்லறிகள் சீனத் தயாரிப்புக்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இந்த ஆட்டிலறிகள் விடுதலைப் புலிகளின் கைக்கு எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து இலங்கை இராணுவத்தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.
நீலம் புயலினால் ஏற்பட்ட மண்அரிப்பை அடுத்து, விடுதலைப் புலிகளால் கரையோரத்தில் புதைத்து வைக்கப்பட்ட 5 ஆட்லறிகளை இலங்கை இராணுவத்தினர் நேற்று மீட்டுள்ளனர்.