புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012

வடக்கில் தொடர்ந்து அடை மழை தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில்
வடக்கில் அடை மழை தொடர்வதனால் தாழ்ந்த நிலப் பகுதிகள் வெள்ளத்தினால் மூடப்பட்டிருக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்றக் கிராமங்கள் பலவற்றில் குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்ததனாலும் காற்றினால் கூரைகள் பறந்து, கூரை விரிப்புகள் காற்றினால் அள்ளிச் செல்லப்பட்டதனாலும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு அருகில் உள்ள பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளன. 
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்குவதற்கு நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூரை விரிப்புகள்; தரை விரிப்புகள் தேவையான குடும்பங்களுக்கு அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார். 
 
சிறாட்டிக்குளம், திருமுறிகண்டி, கோம்பாவில், மந்துவில், இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால், கொக்கிளாய், அம்பலவன் பொக்கணை போன்ற இடங்களில் மக்கள் இடம்பெயர்ந்து அருகில் உள்ள பாடசாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அம்பலவன் பொக்கணையில் கடலிலும் நந்திக் கடலிலும் நீர் மட்டம் உயர்வடைந்ததையடுத்து அங்குள்ள மக்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் பாதுகாப்புக்காகப் புதுக்குடியிருப்பை நோக்கி இடம்பெயர்ந்திருந்தார்கள்.

சீனியாமோட்டையில் குடியேற்றப்பட்டிருந்த கேப்பாப்பிலவு பகுதி மக்களுடைய குடிசைகளுக்குள்ளே மழை நீர் புகுந்ததனால் அவர்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்பட்டது. விறகுகள் மழையில் நனைந்திருப்பதனாலும் மழை காரணமாக இருந்து சமைப்பதற்குரிய வசதிகள் பாதிக்கப்பட்டிருப்பதனாலும் பெரும்பாலான குடும்பங்கள் சமையலைக் கைவிட்டிருந்தன.

தரப்பாள் கூடாரங்கள், தற்காலிக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து வீட்டுத் தரை ஈரமாகியதனாலும் நீர் கசியத் தொடங்கியதாலும் வீடுகளுக்குள்ளேயே சிறிய பரண்களை அவர்கள் அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இவர்களின் நிலைமையை அறிந்த தொண்டு நிறுவனம் ஒன்று இந்த மக்களுக்கு மண்ணெண்ணெய் அடுப்புகளை வழங்க முன் வந்து நிலைமைகளை நேரில் சென்று அவதானித்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

ad

ad