புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012


நீலம் புயல் : திருச்செந்தூர், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
 மாற்றுப்பாதையில் இயக்கம் 
'நீலம்' புயல் - கடந்த 3 நாட்களாக மிரட்டிய இந்த புயல் இன்று மாலை கடலூருக்கும் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே மகாபலிபுரத்தில் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. புயல் கரையை கடக்கும்போது சூறாவளி காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த புயல் கரையை கடக்கும்போது சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் ரெயில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 சென்னை எழும்பூரில் இருந்து கடலூர் வழியாக செல்லக்கூடிய செந்தூர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி வழியாக இயக்கப்படும். இதேபோல் மறுமார்க்கத்தில் திருச்செந்தூர், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் ரெயில்களும் விழுப்புரம் வழியாக இயக்கப்படுகிறது.

எழும்பூர்-காரைக்கால் ரெயில், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, நீடாமங்கலம், திருவாரூர் வழியாக இயக்கப்படும். , எழும்பூர்-மன்னார்குடி ரெயில் விழுப்புரம், திருச்சி, தஞ்சை, நீடாமங்கலம் வழியாக இயக்கப்படும்.

 விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூர்-நாகூர் பயணிகள் ரெயில் விருத்தாசலம் வரை மட்டுமே செல்லும். விருத்தாசலம்-நாகூர் வரையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மறுமார்க்கத்திலும் நாகூர்-விருத்தாசலம் இடையே ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad