புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2012

உடனடியாக எரிபொருளை இறக்குமதி செய்யவும் : ஜனாதிபதி உத்தரவு
நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து உடனடியாக எரிபொருள் இறக்குமதியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில்,

மக்களின் அவசர தேவைகளை அறிந்து உடனடியாக எரிபொருள் இறக்குமதியை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதுடன்
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உரிய முறையில் பராமரிக்க வேண்டுமெனவும் கூறினார்.

இச் சந்திப்பில் நுகர்வோருக்கு எரிபொருள் விநியோகம் மற்றும் மின்சார விநியோகம் செய்யும் போது ஏற்படும் நட்டத்தை எவ்வாறு குறைப்பது என்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

ad

ad