-

17 நவ., 2012




தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான விநாயகம், பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் மற்றுமொரு சிரேஸ்ட தலைவரான பரிதி எனப்படும் றீகன் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்கேத்தின் பேரில் விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐநாவின் மூத்த அதிகாரி சார்ள்ஸ் பெற்றியின் அறிக்கையின் மூலம் இலங்கைக்கு அழுத்தம்
பிரித்தானியைவைச் சேர்ந்த ஐநாவின் மூத்த அதிகாரியான சார்ள்ஸ் பெற்றி தயாரித்த அறிக்கையை கொண்டு சர்வதேச நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கவிருப்பதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.


கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் வடபகுதி தழிழர்களுக்கு ஆபத்து என்றும் இந்திய அரசிற்கு எதிராகவும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது. இன்று காலை 11 மணியளவில் யாழ்.பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ் யுவதிகள் 100 பேர் நாளை இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் வவுனியாவிலுள்ள இலங்கை இராணுவத்தின் 6ஆவது தொண்டர் அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதேவேளை, மேற்படி இராணுவத்தில் இணையும் யுவதிகள் யாழ்ப்பாண பிரதேசத்தில் வேவையில் அமர்த்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

41 இலட்சம் மாணவர்களுக்கு டிசம்பர் 6ஆம் திகதி புதிய பாடப்புத்தகங்கள் விநியோகம்

41 இலட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி கண்டி தர்மராஜ கல்லூரியில் நடைபெறுமென கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வாயு கசிவினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் கிரிபத்கொட மற்றும் ராகம வைத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளன.

India 521/8d
England 41/3 (18.0 ov)
2013ம் ஆண்டு கனடாவிற்குள் 260,000 பேரை கனடாவிற்குள் அனுமதிக்க கனடிய குரவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 
இதில் தொழில்சார்ந்த பயிற்சியுடைய, கல்வித்தகுதி மற்றும் வியாபார முதலீட்டாளர்கள் என்ற வகையாறவிற்குள் அடங்கங்கூடிய 158,000 பேர் அனுமதிக்கப்படவுள்ளனர். இது முழுத்தொகையின் 62 வீதமாகும்.

16 நவ., 2012


இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. 
முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன் குவித்தது. ஷேவாக் 117, காம்பீர் 45, தெண்டுல்கர் 13, கோலி 19 ரன்னும் எடுத்தனர். புஜாரா 98 ரன்னுடனும், யுவராஜ் சிங் 24 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.


வேட்டி-சட்டை அணிந்து பங்கேற்பு: ஐ.நா.சபை கூட்டத்தில் தமிழில் பேசிய ஜி.கே.மணி
ஜெனிவா ஐ.நா.சபை மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்திலும், லண்டனில் நடைபெற்ற அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் உலகத்தமிழர் மாநாட்டிலும் கலந்து கொண்டு திரும்பிய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தோல்வி அடைந்ததற்கு சி.ஏ.ஜி.தான் காரணம்: கபில் சிபல் குற்றச்சாட்டு
சமீபத்தில் நடைபெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 நாட்கள் நடந்த இந்த ஏலத்தில் ரூ.9407 கோடிக்கு மட்டுமே அலைக்கற்றை ஏலம் போனது. ஏற்கனவே

கசிந்துள்ள ஐ.நா அறிக்கையின் படி 80,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல் !
ஐ.நா செயலாளர் நாயகத்தால், இலங்கையில் போர் நடைபெற்றவேளை ஐ.நா காத்திரமான முடிவுகளை எடுக்கவில்லையா என ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இக் குழு 128 பக்கங்களைக் கொண்ட தனது அறிக்கை ஒன்றை நேற்றைய தினம்

தருமபுரி கலவரத்துக்கு தமிழக அரசே பொறுப்பு! ராமதாசுக்கும் ஒரு வேண்டுகோள்! திருமாவளவன் பேட்டி!
கடந்த 07.11.2012 அன்று கலப்பு திருமணம் காரணமாக, தர்மபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடந்த கலவரத்தில் 268 வீடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டன. 

தொழில் அதிபரை மணக்கிறார் நடிகை பூஜா காந்தி
 
2003-ம் ஆண்டு திரை உலகில் காலடி பதித்த நடிகை பூஜா காந்தி, ஏராளமான கன்னட படங்களில் நடித்ததன் மூலம் கன்னட திரைப்பட ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

இரட்டை சதம் அடித்தார் புஜாரா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் புஜாரா இரட்டை சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் புஜாரா அடித்த முதல் இரட்டை சதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டை சதம் அடித்த 17வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார் புஜாரா. அகமதாபாத் போட்டியில் 374 பந்துகளில் 21 பவுண்டரி விளாசி இரட்டை சதத்தை எட்டினார்

ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட இந்தியா முன்வர வேண்டும்! கி.வீரமணி வலியுறுத்தல்!
UNO வுக்கு அழுத்தம் கொடுத்து, ராஜபக்சேவை குற்றவாளியாகக் கூண்டில் நிறுத்திட இந்தியா முன்வர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
புதுக்காட்டில் வாகன விபத்து யாழ். மறைமாவட்ட குரு பலி
யாழ்ப்பாணம் புதுக்காட்டு சந்திப்பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ். மறைமாவட்ட குருவான கே. லக்மன் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கிய இவர்
சம்பூர் பாதுகாப்பு வலயம் தொடர்பான மனு குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்தை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் அரசாங்கம் தனது விளக்கத்தை அளிக்கவேண்டுமென்று உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய சென்றடைந்த அகதிகள் படகில் இருந்து சடலம் மீட்பு
நேற்று கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்த இந்த அகதிப் படகில் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்பாவி மக்களைக் கொன்றுதான் போர் முடிவுக்கு வந்தது என்ற உண்மையை ஐ.நா பகிரங்கப்படுத்தியுள்ளது: மனோ கணேசன்
இலங்கையில் 40, 000க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை பலி கொடுத்து, இன்னொரு பெருந்தொகையினரை காணாமல் போகச்செய்துதான், இலங்கை அரசாங்கம் புலிகளை ஒழித்தது என்ற உண்மை ஐநாவின் உள்ளக அறிக்கை இன்று பகிரங்கப்படுத்தியுள்ளது

ad

ad