மாமல்லபுரம் சித்திரை முழுநாள் விழாவைத் தொடர்ந்து கடந்த மாதம் 25ம் தேதி மரக்காணத்தில் நடந்த கலவரத்தை அடுத்து, போலீசார் எடுத்த நடவடிக்கையைக் கண்டித்து விழுப்புரத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
-
10 மே, 2013
730 அரசுப் பேருந்துகள் உடைப்பு; 17 பேருந்துகள் எரிப்பு:
6,300 பா.ம.க.வினர் கைது
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்களில் ஒரு வாரத்தில் 730 அரசுப் பேருந்துகள் உடைக்கப்பட்டுள்ளன. 17 பஸ்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 6,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
9 மே, 2013
77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 54வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியும் ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணி முதலில் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 20 ஒவரில் 3 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 99 ரன்கள் குவித்தார்.பின்னர் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி எனற இலக்குடன் களம் இறங்கிய ஹைதாராபாத் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதானால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 05.05.2013 அன்று நடைபெற்றது. அதற்கான வாக்குகள் இன்று (08.05.2013) எண்ணப்பட்டன.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட 222 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கட்சி.
தேவகௌடா, குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா தளம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 16 தொகுதிகளில் சுயேட்சை வேட்பளார்கள் மற்றும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர்.
இலங்கைக்கு சுவிஸிலிருந்து விடுமுறையில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில், படுகாயம் அடைந்திருந்த மற்றுமொரு மகனான ஜவீன் ஜனனும் மரணம்!!!
சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு சென்றிருந்தனர். தம் விடுமுறையை கழித்து விட்டு
8 மே, 2013
கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. 36 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது. காலை 9.13மணி நிலவரப்படி,
காங்கிரஸ்- 46,
பாஜக - 26
ம. ஜனதா தளம் - 16
க.ஜ.க - 3, மற்றவை - 10
ஆகிய இடங்களில் முன்னிலை வகித்தது.
7 மே, 2013
சுவிஸிலிருந்து விடுமுறைக்காக இலங்கைக்குச் சென்றவர்களுள் புங்குடுதீவை சேர்ந்தஒரு சிறுமி உட்பட இன்னொருவரும் வீதி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சுவிஸ் சூரிச் இல் வசிக்கும் கரம்பனைச் சேர்ந்த பசுபதி ஜவீன், புங்குடுதீவை சேர்ந்த ஜெயந்திமாலா தம்பதியினர் தம் பிள்ளைகளோடு இலங்கைக்கு சென்றிருந்தனர்.
தம் விடுமுறையை கழித்துவிட்டு சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் திரும்ப இருந்த வேளையிலேயே இக் கோர விபத்து நடைபெற்றுள்ளது.
மீண்டும் தமிழ் மக்களை படையில் இணைக்கும் முயற்ச்சிகள் அரங்கேறியுள்ளன வன்னியில் இளைஞர், யுவதிகளை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள சிவில் பாதுகாப்புப் படையில் இணைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
போராளிகள் பலரும், ஏனைய இளைஞர், யுவதிகளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பண்ணை வேலை, ஆசிரியர் வேலை என்று கூறி
வடக்கில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சரியான பிரதிநிதிகளையும் தலைவரையும் தெரிவு செய்யுமாறு ஈ.பி.டி.பியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் மீனவ சமவாயத்தை சேர்ந்தவர்களை சந்தித்து பேசும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மீன்பிடி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)