புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 மே, 2013


ராமதாஸை விடுதலை செய்யக் கோரி பாமக செயலாளர் தற்கொலை

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கைதைக் கண்டித்து சேலத்தில் பாமக செயலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சேலம் மணியனூர் பாரதி நகரை சேர்ந்தவர் சின்ராஜ். 36 வயதான இவர் வெள்ளி பட்டறை தொழிலாளி. 50-வது கோட்ட பாட்டாளி மக்கள் கட்சியின்
செயலாளராகவும் உள்ளார். கட்சி பணியில் சின்ராஜ் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை அறிந்த சின்ராஜ் கடந்த சில நாட்களாக மனவருத்தம் அடைந்தார். வேலைக்கும் சரியாக செல்ல முடியாத நிலையில் சின்ராஜ் சோகமாக இருந்தார். பார்ப்பவர்களிடம் டாக்டர் ராமதாஸ் தற்போது சிறையில் உள்ளார். அவர் எப்போது விடுதலை ஆவார் என்றே தெரியவில்லை என்றும் எப்போதும் அதே நினைவாக இருப்பதாக கூறினார். இதற்கிடையே இன்று காலை சின்ராஜ் தற்கொலை செய்யும் நோக்கில் வெள்ளிப்பட்டறைக்கு சென்றார். அங்கிருந்த சயனைட்டை எடுத்து வந்து வீட்டில் வைத்து குடித்து விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் துடிதுடித்து அவர் இறந்து விட்டார். இதனை பார்த்த அவரது மனைவி அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து சின்ராஜ் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட சின்ராஜுக்கு மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

ad

ad