புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 மே, 2013


ஜெ.குருவை ஒன்றரை நாள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி! திருக்கழுக்குன்றம் நீதிமன்றம்!
வன்னியர் சங்க தலைவரும், ஜெயங்கொண்டம் தொகுதி பாமக எம்எல்ஏ ஜெ.குருவை ஒன்றரை நாள் காவலில் வைத்து விசாரிக்க காவல்துறைக்கு திருக்கழுக்குன்றம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
மாமல்லபுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நடந்த சித்திரை திருவிழாவின்போது வன்முறையை தூண்டியதாக பேசியதாக ஜெ.குரு மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
இந்த நிலையில் ஜெ.குருவை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர். ஒன்றரை நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் மாமல்லபுரம் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது. 

ad

ad