புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2016

எங்கே 2 எம்.எல்.ஏ.க்கள்...அறிவாலயத்தில் தேடும் கேப்டன்...

கேப்டன் கூடாரத்திலிருந்து  தேமுதிக யாரோடு கூட்டணியில் கலக்கிறது என்ற எதிர்பார்ப்புகள் முடிந்து ம.ந.கூ.யோடு தேமுதிக ஐக்கியமானது
ம் அதன் மீதான விமர்சனங்கள்,  சார்புநிலை கருத்துகள்  என பல இடங்களில்  தேமுதிக குறித்தே பேச்சு.

 திமுக கூட்டணியோடு நாம் போனால் நம் கூட்டணி  ஆட்சியைப் பிடிக்கும். அதன்மூலம் பொருளாதார நெருக்கடியை  சமாளித்துக் கொள்ளலாம், மக்கள் நலக் கூட்டணியோடு போய் அடிபட்டால் அதன்பின்னர் நம்மைக் காப்பாற்ற ஒருவரும் இருக்க மாட்டார்கள் என்று  தேமுதிக சைடிலிருந்து ஒருசிலர் குரல் கொடுக்க ஆரம்பித்ததும் இதன் தொடர்சியாகத்தான்...

தேமுதிக சார்பில்  விஜயகாந்த் நடத்திய நேர்காணலின் போதே, யாருடன் கூட்டணியை வைத்தால் நல்லது  என்ற கேள்வியை  அங்கு முன் வைத்ததாகவும்  திமுகதான்  நமக்கு நல்லது என்று பலர் விஜய காந்த்திடம் தெரிவித்ததாகவும்  அப்போதே தகவல்கள் வெளியானது. திமுகவுடன் கூட்டணி வைத்தால் நல்லது என்ற  தேமுதிகவினர்  கருத்து குறித்து   விஜயகாந்த் எந்த ரியாக்‌ஷனையும் அப்போது பெரிதாக வெளிக்காட்ட வில்லை.  'கூட்டணி சேர்வதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் , உங்க மனசு எப்படி இருக்கிறது என்று பார்த்தேன் ' என்ற பதிலோடு அப்போதைக்கு  அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

 அதே வேளையில் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் குறித்த  ' மிஸ்சிங்' தகவல்களையும்  ஒதுக்கி விட வில்லை. சில கட்சிகளில் உள்ளது போல், தேமுதிகவிலும்  சைலண்ட்டாக  ஸ்பெஷல் டீம் போடப்பட்டு  வதந்திகள் குறித்த விசாரணை நடந்து கொண்டிருந்தது. அதனால்தான் ம.ந.கூ. யோடு தேமுதிக கைகோர்த்த அன்று தேமுதிகவின்  மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள்  என்று முக்கிய நிர்வாகிகள் யாருக்கும்  தேமுதிக தலைமையிலிருந்து  தகவல் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ம.ந.கூ.யோடு ஒப்பந்தம் பேசி முடித்த பின்னர்தான் ,  அதுவும், வைகோ வெளியே வந்து பேசியது காட்சி ஊடகங்களில் வெளியான பின்னர்தான் முக்கிய நிர்வாகிகளுக்கே தேமுதிக இப்போது ம.ந.கூ. அணியில் இருக்கிறது என்று தெரிய வந்திருக்கிறது. அதிகபட்ச வதந்திகளில் அடிபட்ட சந்திரகுமார், நல்லதம்பி,  பாபுமுருகவேல்  உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி குறித்த தகவல் உறுதியான கொஞ்ச நேரத்தில் தேமுதிக அலுவலகம்  நோக்கி வர ஆரம்பித்து விட்டனர். அங்கேயே மகிழ்ச்சியை தெரிவிக்கும் விதமாக இனிப்பும் கொடுத்து மகிழ்ந்தனர். வதந்திகளையும் உடைத்திருக்கின்றனர்.
சகோதரியின் கணவரின் திடீர் மரணத்தால் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. நல்லதம்பி படு அப்செட். வாரக் கணக்கில் வீட்டிலேயே முடங்கி விட்டார். ஆனால்  அதுவேறு மாதிரியாகி எம்.எல்.ஏ. நல்லதம்பி 'மிஸ்சிங்' என்ற தகவல்தான் வெளியில் பரவியது. ஆனால், நல்லதம்பியின் குடும்பத்து துயரத்தில் சுதீஷ் பங்கேற்று ஆறுதல் கூறியுள்ளாராம். 29-03-2016 அன்று  பிரேமலதாவின் (திருச்சி) பிரச்சார நிகழ்ச்சியில் நல்லதம்பி  இருக்கிறார் என்கிறது தேமுதிக அலுவலக செய்திக் குறிப்பு.

கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. வும், திருவள்ளூர் மா.செ.வுமான சி.ஹெச்.சேகர், விழுப்புரம் எம்.எல்.ஏ.வும், மா.செ.வுமான வெங்கடேசன் குறித்தும் இதே போன்று தகவல் பரவியது.   அதை உறுதி செய்யும் விதமாக ம.ந.கூ. யோடு தேமுதிக இணைந்த அன்றோ, அதன் பின்னரோ  இவர்கள் தேமுதிக  தலைமை அலுவலகம் பக்கம் போகவில்லையாம்.  அது மட்டுமல்லாமல், தங்கள் மீதான  ' அணி தாவும் அவதூறு'  குறித்து  இவர்கள் எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லையாம். அதனால், இவர்கள் குறித்து தேமுதிக ஏரியாவில்  சந்தேகப் பார்வை வலுவாகி இருக்கிறது.

அறிவாலயம் பக்கம் போகவிருக்கும் (?!) முக்கியமான  மூவரில் இவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பதை  இவர்கள்தான் சொல்லமுடியும்...எங்கே 2 எம்.எல்.ஏ.க்கள்...அறிவாலயத்தில் தேடும் கேப்டன்...

ad

ad