புதன், ஜூன் 05, 2019

குழப்பத்தில் கொழும்பு அரசியல்:அதிரடி முடிவுகள் வெளிவரும்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவால் இலங்கை அரசாங்கத்தில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

தாக்குதல் பற்றி அறிந்திருந்தும் தடுக்க தவறியதாக மைத்திரி மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதையடுத்து அவர் சீற்றமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.

இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரி அதிரடி தீர்மானங்கள் எடுக்க கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையின் தொடர்ச்சியாக நாடாளுமன்ற அமர்வை இடை நிறுத்த அவர் முற்படலாமென கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன