புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூன், 2019

குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் வழக்குத் தொடரப்படும் – ரணில்

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் அவர்கள் மீது வழக்குத்தொடரவும் குற்றவாளிகள் இல்லாவிட்டால் அதற்கான ஆதாரங்களை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

யுத்தக்காலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஆனால் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத அமைச்சரவை உருவாகியுள்ளது.

ஆகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பனர்களிடம் சென்று வாக்கு மூலத்தை பெற்று ஒருமாதத்துக்குள் இறுதி விசாரணை அறிக்கைகளை குற்ற விசாரணை பிரிவு பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அந்த அறிக்கைக்கு அமைவாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடுமாக இருந்தால் அவர்கள் மீது வழக்குத்தொடரவும் குற்றவாளிகள் இல்லாவிட்டால் அதற்கான ஆதாரங்களை வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இலங்கை நிர்வாக அபிவிருத்திக்கான கல்வி நிறுவனத்தின் ஆறாவது மாநாடு பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் இன்று பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ad

ad