புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2013


இலங்கையை எதிர்த்து மாணவர்கள் உண்ணாவிரதம்: நள்ளிரவில் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு
இலங்கையை கண்டித்து சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய சட்டக் கல்லூரி மாணவர்களை நள்ளிரவில் போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 


சென்னை மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்ட மாணவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர். அனைத்து சட்டக் கல்லூரி மாணவர்களும் ஆங்காங்கே அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்களது போராட்டத்தை ஏதாவது ஒரு வகையில் தெரிவிக்க வேண்டும் என்பதால், காந்தியடிகள் தலைமையில் அமர்ந்து அறவழியில் உண்ணாவிரதம் இருக்கிறோம் என்றனர் மாணவர்கள். 
போலீசாரின் வேண்டுகோளை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தது. அப்போது ஒரு மாணவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
இதற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் கூறியதாவது, சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் காந்தி வழியில் அறவழியில் உண்ணாவிரதம் மேற்கொண்டோம். மாணவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. அறவழியில் போராடும் மாணவர்களை இழுத்துச் செல்லும் காவல்துறையை கண்டிக்கிறோம். எங்களது போராட்டம் தொடரும் என்றனர். 

ad

ad