புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

31 மே, 2016

மங்கள சமரவீரவைச் சந்திக்க இணங்குவாரா ஜெயலலிதா?

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசுவதற்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, கோரிக்கை
விடுத்திருப்பதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இந்தக் கோரிக்கைக்கு இன்னமும் பதிலளிக்கப்படவில்லை என்று அதிகாரபூர்வ வட்டாரம் ஒன்று தெரிவித்ததாகவும், அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்ற, ஜெயலலிதாவுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வாழ்த்துத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் இன்று தமிழ்நாடு முதலமைசச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.