புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2016

கோண்டாவில்: தனிமனித முயற்சியில் தலா 2 மில்லியனில் 15 வீடுகள்

 குவேந்திரன் எனும் தனிமனிதனின் முயற்சியாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள ராஜா பிளாசா மாதிரிக்கிராமம் பயனாளிகளிற்கு எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை கையளிக்கப்படவுள்ளது.

கோண்டாவில் கிழக்கை சேர்ந்த அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம்இகுமரன் விளையாட்டுக்கழகம் என்பவை இணைந்து உயர்த்தும் கைகள் வேலைத்திட்டத்தின் கீழ் நிலாவரை பகுதியினில் இவ்வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
யுத்தத்தினில் குடும்பங்களை இழந்த மற்றும் தெல்லிப்பழை துர்க்காதுரந்தரி ஆச்சிரமத்தினில் தங்கியிருந்த இளம்பெண்களிற்கு அவர்கள் தமது வாழ்வை தொடர ஏதுவாக இவ்வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.
இவ்வீடுகள் தலா 2மில்லியன் மதிப்பீடு கொண்டவையாகும்.
நிகழ்வினில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எதிர்வரும் 26ம் திகதி கொடையாளரை கௌரவிக்கும் நிகழ்வை ஊர் மக்கள் முன்னெடுக்கின்றனர்.

ad

ad