புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2016

வடக்கின் பொருளாதார மத்தியநிலையம் குறித்து றிசாட்.ஹரிசன் மீது பாய்ந்த முதல்வர் விக்கி

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பில் அமைச்சர்களான றிசாட், ஹரிசன் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களுக்கு முதலமைச்சர் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
கபினட் அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டார். இதன்போது வவுனியா பொருளாதார நிலையம் அமைப்பதற்கு பொருத்தமான காணி வழங்கப்படாமையால் திட்டத்தை மதவாச்சிக்கு மாற்ற அனுமதி வழங்குமாறு கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் ஹரிசன் அமைச்சரவையிடம் கோரியுள்ளார்.
இதன்போது பதிலளித்து பேசிய முதலமைச்சர், இத்திட்டத்திற்கு பொருத்தமான காணிகள் எம்மால் வழங்கப்பட்டன. ஆனால் அக் காணிகள் தொடர்பில் ஏதோதோ காரணங்களைக் கூறி தட்டுக் கழிக்கப்பார்கிறீர்கள். முதலில் இவ்வாறான திட்டங்களை வடக்கில் அமைக்க அமைச்சருக்கு விருப்பம் இருக்கா என தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். அமைச்சரால் கோராப்பட்ட தாண்டிக்குளம் காணி பொருத்தமில்லை என துறைசார் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் மாற்றுக் காணியை வழங்கியுள்ளோம். நகரில் கூட ஒரு காணியை வழங்கியுள்ளோம் என முதலமைச்சர் தெரிவித்த போது அமைச்சர் ஹரிசன் நகரில் தந்த மற்றைய காணி நீண்டகால குத்தகையில் வழங்கப்பட்டுள்ளது. அதனை பெற முடியாது எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், அந்தக் காணி குத்தகைக்கு வழங்கப்படவில்லை. அந்த காணி தொடர்பாக பரிசீலித்து பார்த்தேன். அது தற்போதும் அரச காணியாகவே உள்ளது என பதிலளித்தார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் றிசாட், இத் திட்டத்தை தாண்டிக்குளத்தில் அமைக்க வடமாகாண சபை முடிவெடுத்து விட்டது. முதலமைச்சர் தான் இதை குழப்புகிறார் எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், வவுனியாவில் இடம்பெறும் குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் றிசாட் அமைச்சர் தான். அதை நான் இங்கு விபரமாக குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் நாம் பொருத்தமான காணியை வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
இக்குழப்பத்தை பார்த்த ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பில் முதலமைச்சரையும் பிரதமரையும் கலந்துரையாடி ஒரு வாரத்திற்குள் சாதகமான முடிவெடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

ad

ad