புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2016

23 ஆம் திகதி வாக்கெடுப்பில் பிரித்தானிய குடிமக்கள் என்ன சொல்ல போகிறர்கள்? , ஐரோப்பிய யூ னியனில் இருந்து பிரிய போகிறார்களா

சூரியன் மறையாத பேரரசு’ என்று ஒரு காலத்தில் மார் தட்டிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளி யேறிவிட
துடித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களின் கருத்தை அறிய இம் மாதம் 23-ம் நாள் வியாழக்கிழமையை பொது வாக்கெடுப்புக்கான நாளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. 18 வயது நிரம்பிய பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற அனைவரும் நேரிலோ, தபால் மூலமோ வாக்களிக்கலாம்.
பிரிட்டனில் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளிலும் இது பதற்றத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. தவிர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் பொது வாக்கெடுப்பு முடிவு எப்படியிருக்குமோ என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
உலக நாடுகள் முழுவதுமே பொருளா தார மந்த நிலையால் உற்பத்தி, வேலை வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டிருக் கிறது. இன்னமும் மீட்சியடையாமல் பல நாடுகள் தவித்து வருகின்றன. இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பி லிருந்து பிரிட்டன் விலகினால் அதனால் பலவீனமடையப் போவது ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்ல பிரிட்டனும்தான்.
இந்த முடிவுக்கு பிரிட்டனிலேயே ஆதரவும் எதிர்ப்பும் கிட்டத்தட்ட சம நிலையில் இருக்கிறது. எனவே முடிவு எப்படியிருக்குமோ என்ற கவலையில் இரு தரப்புமே காத்திருக்கின்றன.
சாதகங்கள்
ஐரோப்பிய கூட்டமைப்பில் உறுப்பு நாடாக இருப்பதால் இதில் இடம் பெற்றுள்ள 28 நாடுகளுக்கும் தனது பொருள்களை எந்தவித வரிவிதிப்பும் இல்லாமல் பிரிட்டனில் விற்க முடிகிறது. அந் நாடுகளுக்கு பிரிட்டிஷ் குடிமக்கள் செல்வதற்கு ‘விசா’ அவசியமில்லை. அத்துடன் இந் நாடுகளில் பிரிட்டிஷார் கல்வி பயிலவும் தொழில், வர்த்தகம் செய்யவும் முடிகிறது.
ஐரோப்பிய நாடுகளின் பிரச்சினைகளை விவாதிக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் இருக்கிறது. உலகின் பிற நாடுகள் ஐரோப்பிய நாடுகளுடன் தொழில், வர்த்தக உறவுகளை மேற்கொள்ள நினைத்தால் ஐரோப்பிய கூட்டமைப்பு மூலம்தான் நாட வேண்டியிருக்கிறது. கூடி வாழ்ந்தால் கோடி இன்பம் என்ற அளவில் ஐரோப்பிய கூட்டமைப்பு ஒரு பாதுகாப்பு கவசமாகத் திகழ்கிறது.
பாதகங்கள்
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருப்ப தால் முழுக்க முழுக்க சாதகங்கள்தான் என்றால் பிரிட்டன் வெளியேறத் துடிப் பானேன் என்ற கேள்வியும் எழுகிறது. எது ஒன்றுக்கும் ஐரோப்பிய கூட்டமைப்பு மூலம்தான் பேசவோ, செயல்படவோ முடிகிறது என்று பிரிட்டன் நினைக்கிறது. தன்னுடைய உலக ஞானம், ராணுவ பலம், நாடாளுமன்ற நடைமுறையில் தனக்கு இருக்கும் பெரும் பலம் யாவும் ஐரோப்பிய கூட்டமைப்பு என்ற திரைக்குள் அமுங்கிப் போகிறதே என்பது பிரிட்டனின் மனக்குறை.
அதைவிட முக்கியம் பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை தேடி பிரிட்டனுக்கு - அதிலும் குறிப்பாக லண்டனுக்கு - வருவது அதிகமாக இருக்கிறது. இதனால் லண்டன் முழுக்க விதேசிகளாகவே சுற்றித் திரிவது பிரிட்டிஷாருக்கு உறுத்தலாக இருக்கிறது. அவர்கள் குறைந்த சம்பளத்துக்கு வேலையில் அமர்வதால் தங்களுக்குரிய வேலைவாய்ப்பும் பறிபோவதாக நினைக்கின்றனர்.
ஐரோப்பிய கூட்டமைப்பிலேயே ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சு கல் போன்ற குறிப்பிட்டுச் சொல்லும் படியான பல நாடுகள் இருந்தாலும் அவை எல்லாம் தங்களுடைய தனித்தன்மை காரணமாகவும் கடுமையான உழைப்பு, திறமையான நிர்வாகம் காரணமாகவும் பிரிட்டனைச் சீந்துவதே இல்லை.
அந் நாடுகளில் பிரிட்டிஷாருக்கு அதிக வேலைவாய்ப்பும் கிடைப்பதில்லை. எத்தனையோ ஆண்டுகள் உலகையே ஆண்ட நம் நாடு கும்பலோடு கோவிந்தா என்று ஐரோப்பிய நாடுகளுடைய கோஷ்டியில் கரைந்து விடுகிறோமே என்ற ஆதங்கமும் சேர்ந்துகொள்ள தனித்துப் போக விரும்புகின்றனர்.
இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, அரசியல் - பொருளாதார ரீதியாக ஐரோப்பிய ஒன்றியம் உருவானது. இந்த ஒற்றுமை மேம்பட நாடாளுமன்றமும் பொது செலாவணியும்கூட ஏற்படுத்தப்பட்டன. இதில் இந்த 28 நாடுகளுக்கும் இதன் ஷரத்துகள் பொருந்தும் என்பதால் உலகின் பிற பகுதி நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.
இந்த நிலையில்தான் சில பிரிட்டிஷ் கூனிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து பிரிந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இதைக் கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின்போது அங்கீகரித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், தான் பிரதமரானால் இதைப் பற்றி விரிவாக விவாதித்து முடிவு காண கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதாக வாக்குறுதி அளித்தார்.
அதைத்தான் இப்போது அமல்படுத்துகிறார். ஆனால் அவருடைய ஆதரவு ஐரோப்பிய ஒன்றி யத்துக்குத்தான். அவருடைய அமைச் சரவையில் சரிபாதிப்பேர் பிரிந்துவிட வேண்டும் என்று கூறுகின்றனர். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் மட்டுமல்ல தொழிலாளர் கட்சியிலும் ஆதரிப்போரும் எதிர்ப்போரும் சம எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருப்போம், நான் பிரிட்டனுக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருகிறேன் என்று டேவிட் கேமரூன் கூறுகிறார். அது சாத்தியமா, சரியா என்ற கேள்வியும் எழுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற நினைப் பவர்கள் பிற ஐரோப்பிய நாடுகளி லிருந்து பிரிட்டனுக்குள் வருபவர்கள் தங்கள் நாட்டு சமூக நலச் சலுகை களை அனுபவிக்கிறார்கள் என்று வயிறெரிகிறார்கள்.
இதனால் தங்க ளுடைய வருமானம் சுரண்டப்படுவ தாகவும் தங்களுடைய வாழ்க்கைத்தரம் குறைவதாகவும் வருத்தப்படுகின்றனர். இனி லண்டனுக்கு வரும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கு சமூக நல உதவிகள் வழங்கப்படாமல் பார்த்துக்கொள்கி றேன், அவர்கள் பெறும் வருமானத்துக்கு வரிச் சலுகை தராமல் வருமான வரி விதிக்கிறேன் என்றுகூட கூறுகிறார் கேமரூன். ஆனால் அவர்கள் நீண்ட நாள்கள் பிரிட்டனில் தங்கியிருந்தால் ஐரோப்பிய கூட்டமைப்பு சட்டப்படி அவர்களுக்கு அந்தச் சலுகைகளைத் தந்தே தீர வேண்டும்.
பிரியக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்?
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரியக்கூடாது என்று சொல் கிறவர்கள் தகுந்த காரணங்களைக் கூறுகின்றனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதால் பிரிட்டன்தான் அதிகப் பலன் அடைகிறது. அதன் பொருள்களும் சேவையும் வெகு எளிதாக பிற ஐரோப் பிய நாடுகளால் வாங்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான வற்றிடமிருந்து பிரிட்டன் எதையுமே வாங்குவதில்லை. அதற்குப் பெரிய சந்தையாக ஐரோப்பா இருக்கிறது. பிரிட்டனுக்கு வேலை தேடி வரும் பிற ஐரோப்பிய நாட்டவர்கள் இளைஞர் களாகவும் படிப்பு, தொழில்திறன் ஆகியவற்றில் மேம்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய வருகையால் குறைந்த சம்பளத்துக்கு தகுதியுள்ளவர்கள் பிரிட்டனுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிவிட்டால் பிரிட்டிஷாரின் சரக்குகளை உலகின் எந்தப் பகுதிக்கும் நிலம், நீர், ஆகாய மார்க்கமாக எளிதில் கொண்டு செல்ல முடியாது. அத்துடன் பிரிட்டனின் நிதிச் சேவைகளுக்கும் கிராக்கி இருக்காது. பிரிட்டிஷ் கல்விநிலையங்கள்கூட வருமானமின்றி வாட நேரும். சுற்றுலாத் துறையும் கூட மிகவும் பாதிக்கப்படும்.
எல்லாவற்றையும்விட முக்கியம் பிரிட்டன் என்பதே அயர்லாந்து, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய 3 பகுதிகளை உள்ளடக்கியது. தனிமரமாகி விட்ட பிரிட்டனுடன் சேர்ந்திருந்தால் நாம் முன்னேற முடியாது என்று அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய இரண்டுமே வெளியேற முற்படும்.
இவையெல்லாம் பிரிட்டிஷ் குடிமக்க ளால் அன்றாடம் உணவகங்களிலும் கருத்தரங்குகளிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் சூடாக விவாதிக்கப் படுகிறது. ஜூன் 23 வாக்கெடுப்புக்குப் பிறகுதான் முடிவு தெரியும் என்றாலும், ஐரோப்பாவிலிருந்து பிரிட்டன் விலகாது என்றே பெரும்பாலானவர்கள் கூறுகி்ன்றனர்.
ஒரு துரதிருஷ்டம் என்னவென்றால் பிரிய வேண்டும் என்று ஆவேசமாகப் பேசுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது; காரணம் சேர்ந்தே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களுடைய கருத்தை வெளிப்படுத்தாமல் மவுனம் காக்கின்றனர்.


ad

ad