15 டிச., 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில், முதற்கட்டமாக, ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளனத் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களுக்கான பதவிகளை வழங்குவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஆறு பேரும், தனிக் கட்சியாக அன்றி, தனி நபர்களாவே, இந்த அரசாங்கத்தோடு இணைந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவருகின்றது. எனினும், புதிய அரசாங்கத்தோடு இணையவுள்ள 6 உறுப்பினர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை