புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2020

www.pungudutivuswiss.com
குழந்தைகளைத் தாக்கும் கொரோனா - நிரூபிக்கும் நெக்கர் வைத்தியசாலை - திடீரென இறக்கும் பிள்ளைகள்


facebook sharing button Sharetwitter sharing buttonemail sharing buttonsms sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttonprint sharing buttonskype sharing button

பிரான்சில் திடீரெனப் பல குழந்தைகளிற்கு இருதயம், நுரையீரல் மற்றும் சமிபாட்டுத் தொகுதிகள் வீக்கமடைந்து, உயிராபத்தான நிலைக்கும், சாவுக்குள்ளும் தள்ளபட்டு வருகின்றனர். இதனால் பெரும் எச்சரிக்கை மணியை, குழந்தைகள் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற NECKER வைத்தியசாலை அடித்துள்ளது.

குழந்தைகள் மற்றும் இளம்பிள்ளைகள், கொரோனாத் தொற்றிற்கு இலக்காகவது மிகவும் அரிது என ஆராய்ச்சிகள் சொல்லியிருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கை பெரும் ஆபத்தை உணர்த்தி நிற்கின்றது.

இவர்களிற்கு வந்திருக்கும் நோய் கவாசாக்கி நோய் (maladie de Kawasaki) அறிகுறி என மருத்துவ மொழியில் கூறப்பட்டுள்ளது.

15 ஏப்ரலில் இருந்து இருபதிற்கும் மேற்பட்ட 3 வயது முதல் 17 வயது வரையுள்ள பிள்ளைகள் இல்-து-பிரான்சில் நெக்கர் அவசரசிகிச்சைப் பிரிவில் உயிராபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என நெக்கர் அவசரசகிச்சைப் பிரிவின் தலைமை மருத்துவர் Dr Sylvain Renolleau தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரிற்கும் கொரோனாத் தொற்று இருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கத்தினாலேயே இந்த கவாசாக்கி நோய் தாக்கி உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளும் இளம் பிள்ளைகளும் கூட தற்போதைய கொரோனா வைரசின் தாக்கத்திற்கு, உட்படுகின்றார்கள் என்பது பெரும் ஆபத்தாகவே உள்ளது.

ad

ad