புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

2 மே, 2020

www.pungudutivuswiss.comகடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்! சீனா பகிரங்க எச்சரிக்கை
அமெரிக்காவோடு இணைந்து சீனாவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவும் செயல்படுமாயின் கடும் விளைவுகள் ஏற்படும் என்பதோடு, தக்க பதிலடியையும் கொடுப்போம் என சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகை உலுகிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை உலகம் முழுதும் 34, 01,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 39 ஆயிரத்து 604 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் உலகில் கொரோனாவை சீனா பரப்பியதால் 184 நாடுகள் நரக வேதனை அனுபவித்து வருவதாகவும், இதற்காக சீனாவுக்கு எதிராக இயன்றதை செய்வேன், என்னால் அதிகம் செய்ய முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகப் பேசியிருந்தார்.

இதற்கிடையில், அமெரிக்க செனட் சபையினரும் சீனாவுடனான வர்த்தக சார்பைக் குறைத்துக் கொள்ள நடவடிக்கை தேவை என்று ட்ரம்புக்கு நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.