புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 மே, 2020

www.pungudutivuswiss.com4000 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கப்பல்: ஒரு நாட்டின் தலைவருக்கு தொடர்பிருப்பதாக கூறும் அமெரிக்கா ஸ்பெயின் கடற்கரையில் 4000 கிலோ போதைப்பொருளுடன் கப்பல்
ஒன்று சிக்கிய நிலையில், வெனிசுவேலா அதிபருக்கு இந்த சம்பவத்துடன் தொடர்பிருப்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.

அந்த கப்பலிலிருந்த பொருட்கள், போதைப்பொருள் கடத்தும் கொலம்பிய கடத்தல் கும்பல் ஒன்றுடன் தொடர்புடையது என கொலம்பிய செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொலம்பிய போதைப்பொருள் கடத்தும் கும்பல்களுக்கு துணை போவதாகவும், 250 டன் போதைப்பொருளை அமெரிக்காவுக்குள் கொண்டு செல்ல முயன்றதற்காகவும் ஏற்கனவே வெனிசுவேலா அதிபர் Maduroவை அமெரிக்கா கைது செய்ய வகை தேடிக்கொண்டிருக்கிறது.


அத்துடன் அவரது தலைக்கு 15 மில்லியன் டொலர்கள் விலையும் வைத்துள்ளது அமெரிக்கா.

20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவுக்குள் பல டன் போதைப்பொருளை கொண்டுவரும் முயற்சியில் Maduro மற்றும் அவரது சகாக்களும் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் Bill Barr தெரிவித்துள்ளார்

ad

ad