புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2021

ஐரோப்பிய கால்பந்து; டென்மார்க்கை வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது.
16-வது ஐரோப்பிய கால்பந்து தொடர் (யூரோ) இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது. இன்று லண்டன், வெம்ளே மைதானத்தில் நடந்த இரண்டாவது அரையிறுதியில், உலக ரேங்கிங் பட்டியலில் நான்காவது இடத்திலுள்ள இங்கிலாந்து அணி, தரவரிசையில் 'நம்பர்-10' ஆக உள்ள டென்மார்க்கை மோதியது. போட்டி துவங்கியது முதல் அனல் பறந்த இந்த ஆட்டத்தில், 30வது நிமிடம் டென்மார்க் தனது முதல் கோலை அடித்தது. டேம்ஸ்கார்ட் தனது அணிக்காக கோல் அடித்து முன்னிலை பெற்று தந்தார். ஆனால், 39வது நிமிடம் டென்மார்க் வீரர் சைமன் கிஜயர் அடித்த பந்து தவறுதாக கோல் போஸ்ட்டுக்குள் நுழைய, சேம் சைட் கோல் வாயிலாக இங்கிலாந்துக்கு சமன் செய்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனையடுத்து போட்டி கூடுதல் நேரத்திற்கு சென்றது. 104வது நிமிடத்தில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் கேன், தனது அணிக்காக வெற்றி கோலை அடித்தார். முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல்கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தியது.
வரும் ஞாயிறுக்கிழமை நடக்கும் பைனலில், இத்தாலியுடன் இங்கிலாந்து அணி கோப்பைக்காக சந்திக்க உள்ளனர்.
ஹாரி கேனின் கூடுதல் நேர பெனால்டி இங்கிலாந்து டென்மார்க்கை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேற உதவியது.

ad

ad